திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தமிழக அரசியலில் பரபரப்பு... லண்டன் செல்லும் அண்ணாமலை.!!பாஜகவுக்கு புதிய தலைவர் நியமனம்.?
கடந்த 2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா மற்றும் கூட்டணி கட்சிகள் தமிழகத்தில் படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
தமிழக பாஜக தேர்தல் தோல்வி
நடந்து முடிந்த 2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி தமிழகத்தின் 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் போட்டியிட்டது. ஆனால் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் அந்தக் கட்சி தோல்வி அடைந்தது. இதனால் தமிழக பாஜக மீது பாஜகவின் தலைமை அதிருப்தியில் இருந்தது.
லண்டன் செல்லும் அண்ணாமலை
இந்நிலையில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருக்கும் அண்ணாமலை சர்வதேச அரசியல் என்ற தலைப்பில் சான்றிதழ் படிப்பை முடிப்பதற்காக லண்டன் செல்ல இருக்கிறார். 4 மாதங்கள் அங்கு தங்கி படிக்க உள்ளதால் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு புதிய தலைவர் அல்லது பொறுப்பு தலைவரை நியமிக்க பாஜக தலைமை யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இதையும் படிங்க: ஆப்ரேஷன் பாஜக... 'களை' எடுக்கப்படும் முக்கிய தலைகள்.!! அண்ணாமலை அதிரடி.!!
தமிழிசை சௌந்தர்ராஜன்
தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் ஆளுநராக பணியாற்றிய முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் புதிய தலைவராக நியமிக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது ஆளுநர் பணியை ராஜினாமா செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது . மேலும் சமீபத்தில் அவர் பாஜகவின் பொதுச்செயலாளர் அமித் ஷாவை சந்தித்த நிலையில் புதிய தலைவராக அவர் நியமிக்கப்படலாம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: மதுபானக்கொள்கை ஊழல் விவகாரம்; மீண்டும் கைது செய்யப்பட்டார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.!