#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அனைவருக்கும் எழுந்த தாடியின் ரகசியம்!. வெளிப்படையாக கூறிய அன்புமணி ராமதாஸ்!.
நாடாளுமன்ற உறுப்பினர், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் கடந்த சில நாட்களாக தாடியுடன் பொது விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் காணப்பட்டார். கடந்த 16 ஆம் தேதி மறைந்த முன்னாள் பாமக எம்எல்ஏ மாவீரன் ஜெ.குரு சிலை திறப்பு விழாவில் அன்புமணி ராமதாஸ் தாடியுடன் காணப்பட்டார்.
எப்பொழுதுமே கிளின் ஷேவ் செய்து கொண்டு பளபளவென வரும் அன்புமணி ராமதாஸ் அவர்களின் இந்த திடீர் மாற்றம் பலர் மனதிலும் எதற்காக தாடி வளர்க்கிறார் என்ற கேள்வி இருந்து கொண்டே இருந்தது. பலரும் எதிர்பார்த்து கொண்டிருந்த இந்த கேள்விக்கு அன்புமணி அவர்கள் பதிலளித்துள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் "தனது இளைய மகளின் ஆசைக்காக தான் தாடி வளர்க்கிறேன்" அப்பா தாடி வையுங்கள் என கேட்டுக்கொண்டதால் மக்களுக்காக இதை வைத்துள்ளேன் என கூறினார்.
மேலும் பாமக கட்சியினரும் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு இந்த கெட்டப் நன்றாக இருப்பதாகவும் சமூகவலைத்தளங்களில் கூறிவருகின்றனர்.