வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
யார் அந்த சார்? - உரிய விசாரணை நடத்த திருமாவளவன் கோரிக்கை.!
மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அரசும், காவல்துறையும் உரிய விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னை அண்ணா பல்கலை.,யில் பயின்று வந்த 19 வயது கல்லூரி மாணவி, சாலையோர பிரியாணி கடை உரிமையாளர் & 15 நிலுவை வழக்கை கொண்டிருந்த சரித்திர பதிவேடு குற்றவாளி ஞானசேகரன் என்பவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில், ஞானசேகரன் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்யும் முன், செல்போனில் சார் என அழைத்து ஒருவரிடம் பேசியதாகவும் தெரியவருகிறது. இதனால் ஞானசேகரனைத் தொடர்ந்து, அந்த சாரையும் கைது செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்து இருக்கிறது.
அரசியல் கட்சிகள் போராட்டம்
இந்த விசயத்திற்கு நீதி வேண்டும் என அதிமுக, பாஜக, நாதக, பாமக ஆகிய கட்சிகள் அடுத்தடுத்து கிண்டி அண்ணா பல்கலை., வளாகத்தில் போராட்டத்தை முன்னெடுத்தது. ஆனால், காவல்துறையினர் அனுமதி மறுத்து, அரசியல் கட்சியினரை கைது செய்து மாலையில் விடுவித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதிவேண்டும், சட்டம் ஒழுங்கு தமிழ்நாட்டில் சீர்குலைந்துவிட்டது என அரசுக்கு எதிரான வாதம் முன்வைக்கப்படுகிறது.
இதையும் படிங்க: #Breaking: ஆதவ் அர்ஜுனன் மீது நடவடிக்கை? - விசிக தலைவர் திருமாவளவன் பரபரப்பு பேட்டி.!
திருமாவளவன் கோரிக்கை
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை திருமாவளவன், "அண்ணா பல்கலைக்கழக மாணவி பலாத்கார விவகாரத்தில், கைதான நபர்களை தாண்டி, பிறர் ஈடுபாடு இருக்கிறது என்பது இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இதனால் இவ்விசயம் குறித்து அரசும், காவல்துறையும் நேர்மையான விசாரணையை முன்னெடுத்து, தவறு செய்தவர்களை பாரபட்சமின்றி கைது செய்ய வேண்டும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ட்ரெண்டிங்கில் #யார்_அந்த_SIR.. காரணம் என்ன?.. விபரம் உள்ளே.!