Toxic: யாஷ் பிறந்தநாள் கொண்டாட்டம்.. டாக்சிக் படத்தின் அசத்தல் கிலிம்ப்ஸ் வீடியோ.!
#Breaking: ஆதவ் அர்ஜுனன் மீது நடவடிக்கை? - விசிக தலைவர் திருமாவளவன் பரபரப்பு பேட்டி.!
கட்சியின் கொள்கைக்கு எதிராக யார் செயல்பட்டாலும் உரிய நடவடிக்கை கட்சியின் சார்பில் எடுக்கப்படும் என திருமாவளவன் எம்.பி பேசினார்.
பேஸ்கட்பால் விளையாட்டு வீரரும், விசிக துணைப்பொதுச்செயலாளருமான ஆதவ் அர்ஜுனா, சமீபகாலமாக தனது கருத்துக்கள் என விசிக-வின் கூட்டணிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலான சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இதனால் திமுக - விசிக கூட்டணியில் உரசல் சூழ்நிலை உண்டாகியது. அதனை விசிக தலைவர் திருமாவளவன், திமுக தலைவர்களை நேரில் சந்தித்து பேசி அமைதிப்படுத்தி வருகிறார்.
இதையும் படிங்க: சினிமாவில் சரிவை சந்தித்ததால் தான் விஜய் அரசியலுக்கு வந்தார்; திமுக ஆர்.எஸ் பாரதி பேட்டி.!
அரசியல் பரபரப்பு
சமீபத்தில் அம்பேத்கர் புத்தக வெளியீடு விழா சென்னையில் நடைபெற்ற நிலையில், அங்கு விசிக சார்பில் ஆதவ் அர்ஜுனன் கலந்துகொண்டார். முக்கிய அழைப்பாளராக தமிழக வெற்றிக் தலைவர்கள் விஜய் கலந்துகொண்டார். இவர்கள் பேசும்போது திமுகவுக்கு எதிரான வாதங்களை நேரடியாக முன்வைத்து இருந்தனர். இதனால் மீண்டும் திமுக Vs தவெக & விசிக பேச்சுக்கள் எழுந்தன. இது ஆதவ் அர்ஜுனாவின் கட்சிப் பொறுப்புக்கு ஆப்பு வைத்தது.
திருமாவளவன் விளக்கம்
இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், "புதிய கூட்டணியில் விசிக சேரவேண்டியம் அவசியம் என்பது ஏற்படவில்லை. காங்கிரசும் - மம்தா பேனர்ஜியின் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள். அம்பேத்கர் நிகழ்ச்சி அரசியலாகும் என்பதாலேயே நான் தவிர்த்துவிட்டேன். விசிக-வுக்கு எதிராக ஆதரவ அர்ஜுனாவின் செயல்பாடுகள் இருப்பதாக கட்சி நிர்வாகிகளும் கருதுகிறார்கள். விக்கிரவாண்டி மாநாடு தவெக சார்பில் முடிந்ததும், நான் எனது நிலைப்பாட்டை கூறிவிட்டேன்.
நடவடிக்கை குறித்து முடிவு
கட்சிக்கு எதிராக யார் செயல்பட்டதால், அது குறித்த முகாந்திரம் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். புதிய கூட்டணியில் விசிக இடம்பெறாது. திமுக கூட்டணி வரும் சட்டப்பேரவை தேர்தலில் பெரிய வெற்றியை அடையும். அதனை தடுக்க சிலர் இவ்வாறான சதிவேலைகளை செய்கிறார்கள். ஆதவ் அர்ஜுனன் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு அறிவிக்கப்படும்" என பேசினார்.
இதையும் படிங்க: #Breaking: "இறுமாப்போடு கூறுகிறேன்" - விஜய்க்கு எதிராக கனிமொழி எம்.பி பாய்ச்சல்.!