மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கோடிகளில் பணம்கொட்டும் கிரிக்கெட்டில் விளையாடிய வீரர் இன்று பஸ் டிரைவரா வேலை பாத்துட்டு இருக்காரு.. பிரபல வீரருக்கு வந்த சோதனை..
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய இளைஞர் அணி வீரர் ஒருவர் பேருந்து ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார்.
இலங்கை அணியில் சுழற்பந்து வீச்சாளராக பல்வேறு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியவர் சுராஜ் ரந்திவ் (Suraj Randiv). இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு இந்தியா - இலங்கை அணி மோதியா உலக கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் அந்த அணிக்காக பந்து வீசியுள்ளார்.
மேலும் இலங்கை அணியில் விளையாடிய இவர் பல்வேறு சர்வதேச ஒருநாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் தொடர்களிலும் விளையாடியுள்ளார். இந்நிலையில் தற்போது உள்ளூர் போட்டிகளில் மட்டுமே விளையாடிவரும் இவர் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பகுதியில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
மேலும் இலங்கை அணியின் மற்றொரு வீரர் சிந்தக ஜெயசிங்கா மற்றும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருந்த வாடிங்டன் மவேங்கா ஆகியோரும் இதே பணியைச் செய்து வருகின்றனர். இதுகுறித்து பேசியுள்ள அவர்கள், சர்வதேச போட்டிகளில் இடம் கிடைக்காமல் தாங்கள் உள்ளூர் போட்டிகளில் மட்டுமே விளையாடிவருவதாகவும், தங்களின் வாழ்வாதாரத்திற்காக பஸ் டிரைவர் பணியை செய்துவருவதாகவும் கூறியுள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடிய பிரபல வீரர் ஒருவர் பேருந்து ஓட்டுநராக வேலை பார்த்து வருவது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.