#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தோனி எங்களை எப்படி நடத்தினார்.? 8 வருடங்கள் கழித்து ஷேவாக் வீசிய குண்டு..!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரர் ஷேவாக் பிரபல இணையதளம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், சமீப காலமாக இளம் வீரர் ரிஷப் பண்ட் அணியில் இருந்து கழற்றி விடப்படுவதை விமர்சித்துள்ளார்.
இதுபற்றி கூறிய அவர், ரிஷப்புக்கு வாய்ப்பு கொடுத்தால்தான் அவரின் திறமை தெரியவரும் என்றும், அணி நிர்வாகம் அவரிடம் கலந்து பேசவேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும், காம்பிர், சச்சின் மற்றும் தன்னை தோணி நடத்தியதுபோல் தற்போதுள்ள அணி வீரர்களிடம் கேப்டன் விராட்கோலி நடந்துகொள்ள கூடாது எனவும் கூறியுள்ளார்.
2012 ஆம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டிகளில் அணியில் ஏற்பட்ட மாற்றம் குறித்து மீடியவில் பேசிய தோணி, தங்களை ஸ்லோ பீல்டர்கள் என்று விமர்சித்திருந்தார். இதுகுறித்து ஒருமுறைகூட தோனி எங்களிடம் கலந்து பேசியதே இல்லை. எங்களிடம் கலந்து ஆலோசிக்காமல் அவர் நேரடியாக மீடியாவில் இவ்வாறு பேசியுள்ளார்.
தோனியைப் போல விராட் கோலியும் தற்போது வீரர்களிடம் கலந்துரையாடாமல் இருந்தால் அது தவறு என்றும், அவர் நிச்சயம் சக வீரர்களுடன் கலந்து ஆலோசித்து விளையாட வேண்டும் என்றும் கூறியுள்ளார் ஷேவாக்.