முன்ஜென்ம பாவங்களைப் போக்கி நன்மையை தரும் எறும்பீஸ்வரர் கோயில்.! எங்கு உள்ளது தெரியுமா.!?



History and special astrology news about temple

எறும்பீஸ்வரர் கோயில்

தமிழ்நாட்டில் அமைந்துள்ள பெருமைமிக்க கோயில்களில் ஒன்றுதான் திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயில். இக்கோயிலுக்கு என்று தனிச்சிறப்பும், வரலாற்றுப் பெருமையும் இருந்து வருகிறது. திருச்சிராப்பள்ளியில் இருந்து தஞ்சாவூர் செல்லும் பாதையில் 13 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது எறும்பீஸ்வரர் கோயில். இக்கோயிலின் சிறப்புகளை குறித்து இப்பதிவில் விளக்கமாக பார்க்கலாம்

temple

கோயிலின் சிறப்புகள்

திருநாவுக்கரசரால் பாட பெற்ற கோயில்களில் ஒன்றுதான் எறும்பீஸ்வரர் கோயில். காவிரி தென்கரை தலங்களில் உள்ள ஏழாவது சிவ தலமாக இருக்கும் இக்கோயில் 250 அடி உயரமுள்ள குன்றின் மீது அமைந்துள்ளது. இக்கோயிலின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள நுழைவாயிலில் இடது புறம் செல்வ விநாயகரும், வலது புறம் ஆஞ்சநேயரும் காட்சியளிக்கின்றனர்.

இதையும் படிங்க: "உலகிலேயே அஷ்டம சனியை போக்கும் ஒரே கோயில் இங்கு மட்டும்தான் உள்ளது" எங்கு தெரியுமா.!?

பரிகாரங்கள்

திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயிலில் மனம் உருக வேண்டி வழிபட்டு வந்தால் ஏழேழு ஜென்ம பாவங்களும் நீங்கி புண்ணியம் கிடைக்கும். நோய்நொடி உள்ளவர்கள் இக்கோயிலை 108 முறை சுற்றி பரிகாரம் செய்து வந்தால் நோய்நொடி நீங்கும். வீட்டில் சண்டை சச்சரவுகள் குறையும். மன அமைதி, நிம்மதி கிடைக்கும் என்பது இக்கோயிலின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

இதையும் படிங்க: 150 ஆண்டுகளுக்கு மேலாக கோயிலை பாதுகாக்கும் அதிசய முதலை.! இக்கோயில் எங்கு உள்ளது தெரியுமா.!?