96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
இறந்தவர்களின் படத்தை வீட்டில் இந்த திசையில் வைக்கக்கூடாது.. என்ன காரணம் தெரியுமா.!?
ஜோதிட சாஸ்திரத்தின் நம்பிக்கைகள்
பொதுவாக இந்தியாவில் இறந்தவர்களின் படத்தை பூஜை அறையிலோ அல்லது வீட்டிலோ வைத்து சாமி கும்பிடுவதை பல குடும்பங்களிலும் பழக்கமாக வைத்திருக்கிறார்கள். மேலும் அவர்களை நினைவில் வைத்திருப்பதற்காகவும், அவர்களின் ஆசீர்வாதம் நம் குடும்பத்திற்கு கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் வெள்ளி, செவ்வாய் கிழமைகள் மற்றும் அவர்களின் நினைவு நாட்கள் போன்ற நல்ல நாட்களில் இறந்தவர்களை கும்பிடுவது வழக்கம்.
இறந்தவர்களின் புகைப்படத்தை எவ்வாறு வழிபட வேண்டும்
ஆனால் ஒரு சில குடும்பங்களில் இறந்தவர்களின் புகைப்படங்களை வைத்து எவ்வாறு வழிபடுவது, எந்த திசையில் புகைப்படங்களை வைப்பது என்பது குறித்து தெரியாமல் அவர்களின் புகைப்படங்களை வைத்து வழிபட்டு வருகிறோம். குறிப்பாக இறந்தவர்களின் புகைப்படங்களை குறிப்பிட்ட திசையில் வைக்கக்கூடாது என்று ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைக் குறித்து இப்பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
இதையும் படிங்க: நிறம் மாறும் கருவறை மண்.! மணலை பிரசாதமாக தரும் மர்ம கோயில்.? தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா.!?
இறந்தவர்களின்
புகைப்படங்களை எந்த திசையில் வைக்க கூடாது
இறந்தவர்களின் புகைப்படங்களை மேற்கு திசை நோக்கி வைத்து வழிபடக்கூடாது. மேலும் வீட்டு பூஜை அறையில் ஒரு சிலர் இறந்தவர்களின் புகைப்படங்களை வைத்து வழிபட்டு வருகின்றனர். ஆனால் இவ்வாறு இறந்தவர்களின் புகைப்படங்களை வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபடக்கூடாது. இவ்வாறு வைப்பதால் குடும்பத்தில் சண்டை சச்சரவு, கஷ்டம், மனக்கவலை போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என்று ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எந்த
திசையில் வைக்கலாம்
எமதர்ம கடவுளின் திசை தெற்கு திசையாக கருதப்படுவதால் வடக்கு பார்க்கத்தில் இறந்தவர்களை புகைப்படத்தை மாட்டி தெற்கு நோக்கி இருக்கும்படி வைத்து வழிபட்டு வந்தால் அவர்களின் ஆசீர்வாதமும் குடும்பத்திற்கு கிடைத்து குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும் என்று நம்பப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: முன்ஜென்ம பாவங்களைப் போக்கி நன்மையை தரும் எறும்பீஸ்வரர் கோயில்.! எங்கு உள்ளது தெரியுமா.!?