#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
புதன்கிழமை இவ்வளவு தீய சக்தி நிறைந்ததா.?! என்னவெல்லாம் செய்யக்கூடாது தெரியுமா.?!
பொண்ணு கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று ஒரு பழமொழி இருக்கிறது. இந்த பழமொழியானது, புதன்கிழமையின் சிறப்பை கூறும் விதமாக இருக்கிறது. இந்துக்களை பொருத்தவரை புதன்கிழமை மிகவும் சிறப்பான புனிதமான நாளாக பார்க்கப்படுகிறது. ஆனால், சில சமூகங்களில் இந்த புதன்கிழமை, சனிக்கிழமையை போல ஒரு தீய அமைப்பு கொண்ட நாளாக பார்க்கப்படுகிறது என்றால் நம்ப முடிகிறதா.? ஆனால் இது உண்மை. இது பாரம்பரிய நம்பிக்கைகளின் அடிப்படையில் இவ்வாறு கூறப்படுகிறது.
ஏன் புதன்கிழமை சனிக்கிழமை போன்ற தீய நாளாக பார்க்கப்படுகிறது என்பது குறித்த காரணங்களை இங்கு பார்க்கலாம்.
புதன்கிழமை குரு கிரகத்தின் தாக்கத்தில் இருக்கக்கூடியது. சனிக்கிழமை சனி கிரகத்தின் தாக்கத்தில் இருக்கும். எனவேதான், இந்த இரு நாட்களும் ஒரே விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. பழங்காலத்தில் சனிக்கிழமை மற்றும் புதன்கிழமை இரண்டுமே தீய நாளாக தான் கருதப்பட்டது. கிரகங்களின் அடிப்படையில் தான் இப்படிப்பட்ட நம்பிக்கைகள் அப்போது மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சொந்த வீடு ஆசை உடனே நிறைவேற வெற்றிலை தீப வழிபாடு.. செவ்வாய்க்கிழமை மறந்து விடாதீர்கள்.!
இவர்களின் கூற்றுப்படி புதன்கிழமை செய்ய கூடாத செயல்கள் பற்றி பார்க்கலாம்.
புதன்கிழமையில் புதிதாக எந்த வேலையையும் துவங்கக் கூடாது. புதிதாக வணிகம் துவங்குபவர்கள் புதன்கிழமையில் எக்காரணத்தை கொண்டும் துவங்க கூடாது. அதுபோல வாழ்க்கை முழுவதும் முக்கியமானதாக கருதப்படும் திருமணத்தை புதன்கிழமை அன்று செய்யக்கூடாது.
வீடு கட்டுவதற்கான பூமி பூஜையை புதன்கிழமையில் செய்யக்கூடாது. புதிய கார் மற்றும் சொத்துக்களை புதன்கிழமையில் வாங்க கூடாது. வாழ்க்கை மற்றும் சொத்து சம்பந்தப்பட்ட முக்கிய முடிவுகளை புதன்கிழமையில் எடுக்கக்கூடாது. புதிய சம்பந்தம் செய்வது, உறவுகளை ஏற்படுத்துவது, புதிதாக பெண் பார்க்க போவது போன்ற விஷயங்களை புதன்கிழமையில் செய்யக்கூடாது.