#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சொந்த வீடு ஆசை உடனே நிறைவேற வெற்றிலை தீப வழிபாடு.. செவ்வாய்க்கிழமை மறந்து விடாதீர்கள்.!
சொந்த வீடு கட்டுவதும், நிலம் வாங்குவதும் நடுத்தர குடும்பங்களில் பலரின் கனவாகும். அதற்காக தொடர்ந்து 9 வாரங்கள் வரும் செவ்வாய் கிழமையில் இந்த இறைவழிபாடு செய்தால் உங்கள் விருப்பம் நிச்சயம் நிறைவேறும். இந்த வழிப்பட்டை எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்ப்போம்.
செவ்வாய் கிழமையன்று முருகனை வழிபடுவதால் ஏற்ப்படும் நன்மைகள்
செவ்வாய் கிழமை முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாளாகும். இந்த நாளான்று வீட்டை சுத்தம் செய்து விட்டு, குளித்து விட்டு முருகப்பெருமானுக்கு விளக்கேற்றி, நறுமணம் மிகுந்த பூக்களை கொண்டு பூஜை செய்தால் மிகவும் நல்லது. மேலும் அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தால் நம் மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும்.
நம் பல நாள் கனவு நிறைவேற செய்ய வேண்டிய வழிபாடு
தேவையானவை
வெற்றிலை - 6
நல்லெண்ணெய் - தேவையான அளவு
அகல் விளக்கு - 1
வழிபாடு செய்யும் முறை
செவ்வாய் கிழமை காலையில் எழுந்து குளித்து விட்டு, பூஜை அறையை சுத்தம் செய்து விட்டு முருகப்பெருமான் படத்தையோ அல்லது விக்ரகத்தையோ எடுத்து சுத்தம் செய்து விட்டு மஞ்சள், குங்குமம் கொண்டு பொட்டு வைத்து, பூ வைக்க வேண்டும். பிறகு, சுத்தமான வெற்றிலையை 6 எடுத்து காம்பை கிள்ளி தனியாக வைத்து விட வேண்டும். பின்பு, ஒரு சுத்தமான தாம்பூலத்தில் 6 வெற்றிலைகளிலும் நுனியில் மஞ்சள், குங்குமம் வைத்து விசிறி வடிவில் பரப்பி வைக்க வேண்டும்.
அதன் பிறகு , ஒரு அகல் விளக்கில் மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்து அந்த வெற்றிலை நடுவில் அகல் விளக்கை வைக்க வேண்டும். பின்பு, விளக்கில் நல்லெண்ணெய் சேர்த்து, கிள்ளி வைத்த வெற்றிலை காம்பையும் சேர்த்து திரி பொட்டு விளக்கேற்றி மனதார முருகப்பெருமானை வழிப்பட்டால் நாம் நீண்ட நாள் கனவு நிறைவேறும். சொந்த வீடு கட்டுதலில் வரும் பிரச்சனைகளும், நிலம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளும் இந்த வாழிபாடு செய்து வந்தால் தீரும். தொடர்ந்து 9 வாரங்கள் செய்தால் பலன் கிடைக்கும்.