மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
11,12 ஆம் வகுப்பு துணை பொதுத்தேர்வு.! எப்பொழுது?? கால அட்டவணை வெளியீடு!!
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மாா்ச் 1 ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 7.8 லட்சம் மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதினா். தொடர்ந்து 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் மே 6ம் தேதி வெளியானது.
துணை பொதுத் தேர்வு
இதில் 94.56% மாணவ,மாணவிகள் தேர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் தோல்வியடைந்த மாணவர்கள் மே 16 முதல் ஜூன் 1ஆம் தேதி வரை துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என கால அவகாசம் கொடுக்கப்பட்டது. மேலும் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம் எனவும், தனித்தேர்வர்கள் மாவட்ட இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
வெளிவந்த கால அட்டவணை
இந்த நிலையில் தற்போது 11 மற்றும் 12 ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, 12 ஆம் வகுப்பிற்கான துணைத் தேர்வுகள் ஜூன் 24 ஆம் தேதி தொடங்கி ஜூலை 1ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மேலும் 11 ஆம் வகுப்பிற்கான துணைத் தேர்வுகள் ஜூலை 2 ஆம் தேதி தொடங்கி 9ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி 1.15 மணி வரை நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கோவை தொகுதியின் வெற்றிமுகம் அண்ணாமலையா? ராமச்சந்திரனா? ராஜ்குமாரா?.. கருத்துக்கணிப்பு நிலவரம் என்ன?.!
இதையும் படிங்க: சைக்கிளில் சென்ற சிறுவனை பாய்ந்து கடித்துகுதறிய நாய்கள்; சென்னையில் நடந்த பதறவைக்கும் சம்பவம்.!