மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சைக்கிளில் சென்ற சிறுவனை பாய்ந்து கடித்துகுதறிய நாய்கள்; சென்னையில் நடந்த பதறவைக்கும் சம்பவம்.!
சென்னையில் உள்ள புழல், ஆசிரியர் காலனி நான்காவது தெருவில் குடியிருப்பவர் ஜோஸ்வா டேனியல். இவரின் மகன் கிளியோபாஸ் ஜெரால்ட் (வயது 12). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வருகிறார். தற்போது விடுமுறை காரணமாக ஜெரால்ட் வீட்டில் இருந்து வருகிறார்.
இந்நிலையில், பக்கத்து வீட்டில் வசித்து வரும் ஜான் என்பவர், வெளிநாட்டு வகையான ராட்வீலர், பாக்ஸர் ஆகிய நாய்களை வளர்த்து வருகிறார். நேற்று மதியம் 03:30 மணியளவில் சிறுவன் ஜெரால்ட் தனது வீட்டருகே இருக்கும் கடைக்கு மிதிவண்டியில் சென்றுள்ளார். அச்சமயம் ஜானின் மகன்களான 12 & 13 வயது சிறுவர்கள், வளர்ப்பு நாய்களை நடைப்பயிற்சிக்கு அழைத்து சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: #JustIN: 12 வயது சிறுவனை கடித்துக்குதறிய நாய்; சென்னையில் மீண்டும் பயங்கரம்.!
சிறுவனை துரத்தி கடித்த நாய்கள்
அச்சமயம் திடீரென ஆக்ரோஷமடைந்த வளர்ப்பு நாய்கள் ஜெரால்டை துரத்த, சிறுவர்களால் நாயை கட்டுப்படுத்த இயலவில்லை. இதனால் அவர்களின் பிடியில் இருந்து பாய்ந்து ஓடிய நாய்கள், ஜெரால்டு மீது பாய்ந்து கடித்து குதறியுள்ளது.
இதனால் சிறுவனின் காது, மார்பு, முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு வந்த அவரின் தந்தை, மகனை நாய்களை விரட்டி மீட்டார். உடனடியாக ஆர்.பி.எஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டவருக்கு தடுப்பூசி செலுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி அதிகாரிகளிடம் உரிமையாளர் உரிமம் வாங்காமல் ஜான் நாயை வளர்த்து வந்ததாக கூறப்படும் நிலையில், அதிகாரிகள் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: நள்ளிரவில் பதம்பார்த்த நாய்கள்; 9 ஆடுகள் பலி., 6 ஆடுகள் படுகாயம்.!