திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கை, கால்களை கட்டி, கதற கதற காட்டில் சிறுமிக்கு நடந்த கொடூரம்.! 4 சிறுவர்களின் கொடூர செயல்.!
சேலம் மாவட்டத்தில் இருக்கும் காடையாம்பட்டிக்கு அருகே கே.மோரூர் எனும் கிராமம் அமைந்துள்ளது. அந்த கிராமத்தில் வசித்து வந்த 16 மற்றும் 17 வயது சிறுவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்துள்ளனர். சில நாட்களுக்கு முன் அந்த ஊரின் வனப்பகுதி வழியே ஒரு சிறுமி நடந்து செல்வதை பார்த்த அவர்கள் சிறுமியை மிரட்டி தங்களுடன் வருமாறு அழைத்துச் சென்றுள்ளனர்.தனால் பயந்து போன அந்த சிறுமி தப்பியோட முயற்சித்த நிலையில் அவரை விரட்டி பிடித்து தங்களது மினி டெம்போவில் ஏற்றி வனப்பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.பின் சிறுமியின் கை கால்களை கட்டி போட்டு அவர்கள் இருவரும் மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
மேலும் சிறுமியின் கண்களையும் கட்டி பாலியல் பலாத்காரம் செய்ததை வீடியோ எடுத்து தங்களுடைய இரு நண்பர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளனர். இதை பார்த்த அவர்களும் அதே காட்டுப்பகுதிக்கு வந்துள்ளனர். பின் தொடர்ந்து, நான்கு பேரும் சேர்ந்து அந்த சிறுமையை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்தனர். அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
அங்கிருந்து சிறுமி தப்பியோடி தனது பெற்றோரிடம் தனக்கு நடந்ததை கூறி கதறி அழுதுள்ளார். இதை தொடர்ந்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் தங்களது ஊர் முக்கியஸ்தர்களிடம் சென்று தனது குழந்தைக்கு ஏற்பட்ட விபரீதங்களை விவரித்துள்ளனர். பின் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த மோசமான செயலில் ஈடுபட்ட இருவரையும் போலீசார் பிடித்து நிலையில் அவர்களை விசாரித்ததில் அவர்கள் ஏற்கனவே இது போல ஒரு சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் 18 வயது நிரம்பாத நிலையில் வணிகரீதியாக மினி டெம்போவை ஒட்டி பணம் சம்பாதித்து வந்ததும் தெரியவந்துள்ளது. தற்போது அவர்களை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்படக்கூடிய நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதில் தொடர்புடைய மற்ற 2 சிறுவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.