வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
2025 புத்தாண்டு கொண்டாட்டம்.. டாஸ்மாக் வசூல் எவ்வளவு தெரியுமா?
2025ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டம் உலகம் முழுவதும் களைகட்டியது. டிசம்பர் 31 அன்று இரவு முதல் தொடங்கிய கொண்டாட்டம், மறுநாள் விடுமுறையை முன்னிட்டும் நல்ல வரவேற்பை பெற்றது.
தமிழகத்தில் சென்னை, கன்னியாகுமரி உட்பட பல சுற்றுலாத்தலங்களில் மக்கள் திரளாக வந்து புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர். குடிமகன்கள் டாஸ்மாக்கில் மதுபானம் வாங்கி மகிழ்ந்தனர்.
அந்த வகையில், புத்தாண்டு அன்று ரூ.400 கோடிக்கு டாஸ்மாக்கில் விற்பனை நடக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டு, மதுபானங்கள் அதிகம் அனுப்பி வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: போதையில் புத்தாண்டு கொண்டாட்டம்.. தட்டிக்கேட்டவர் 3 பேர் கும்பலால் வெட்டிக்கொலை.!
ரூ.430 கோடி வசூல் என தகவல்
இந்நிலையில், தமிழ்நாட்டில் ரூ.430 கோடிக்கு டாஸ்மாக்கில் மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புத்தாண்டு மதுபானம் விற்பனை விபரம் குறித்து டாஸ்மாக் எந்த அறிவிப்பும் தற்போது வரை வெளியிடவில்லை.
எனினும், விபரம் அறிந்த வட்டாரங்களில் இருந்து டாஸ்மாக்கின் வசூ ரூ.420 கோடி முதல் ரூ.430 கோடி வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: காதலிக்க மறுத்த இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி கொலை மிரட்டல்; சென்னையில் பயங்கரம்.!