வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
போதையில் புத்தாண்டு கொண்டாட்டம்.. தட்டிக்கேட்டவர் 3 பேர் கும்பலால் வெட்டிக்கொலை.!
காசிமேடு பகுதியில் போதையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட கும்பலை தட்டிக்கேட்டவர் வெட்டிக்கொல்லப்பட்டார்.
சென்னையில் உள்ள காசிமேடு பகுதியில் வசித்து வருபவர் குமரேசன். நேற்று புத்தாண்டை முன்னிட்டு ஒவ்வொரு பகுதியிலும் கொண்டாட்டங்கள் களைகட்டிய நிலையில், போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களின் கொண்டாட்டத்தை போதையோடு முன்னெடுத்தனர்.
போதையில் கொண்டாட்டம்
இதனிடையே, குமரேசன் வசித்து வந்த பகுதியில் வசித்து வரும் இளைஞர்கள் சரவணன், ஆகாஷ், அபினேஷ் ஆகியோர் போதையில் புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். அப்போது, குமரேசன் மேற்கூறிய மூவர் கும்பல் மதுபானம் அருந்தியதை தட்டிக்கேட்டு இருக்கிறார்.
இதையும் படிங்க: நண்பனை கொன்று ஆற்றில் புதைத்த பயங்கரம்.. 4 மாதமாக கபட நாடகம்.. விழுப்புரத்தில் பயங்கரம்.!
ஆத்திரத்தில் கொலை
இதனால் ஆத்திரமடைந்த நபர்கள், குமரேசனை சரமாரியான வெட்டிக்கொலை செய்தனர். பின் அங்கிருந்து தப்பிச் சென்றனர். கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், குமரேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
குற்றவாளிகளுக்கு வலைவீச்சு
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், போதை கும்பலை தட்டிக்கேட்டதால் குமரேசன் கொலை செய்யப்பட்டது உறுதியானது. குற்றவாளிகளுக்கு அதிகாரிகள் வலைவீசி இருக்கின்றனர். போதைப்பழக்கம் குடிப்பவர்களை மட்டுமல்லாது, அப்பாவியான பிறருக்கும் கேடு விளைவிக்கிறது.
இதையும் படிங்க: பையில் இருந்த மர்மம்.. விடாமல் துரத்திய நாய்.. கன்னியாகுமரியில் பகிர் சம்பவம்.!