மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
போலி டாக்டரால் பறிபோன உயிர்.!! 22 வயது இளைஞருக்கு நேர்ந்த துயர முடிவு.!!
கடலூர் மாவட்டத்தில் போலி மருத்துவரிடம் சிகிச்சை பெற்ற வாய் பேச முடியாத 22 வயது வாலிபர் பலியான சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் போலி மருத்துவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாய் பேச முடியாத இளைஞர்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள மேலதிருக்கழிப்பாலை என்ற ஊரில் வசித்து வந்தவர் கவிமணி. 22 வயதான இவருக்கு வாய் பேசுவதில் பிரச்சனை இருந்திருக்கிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு இருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவரது பெற்றோர் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
இளைஞர் மரணம்
இதனைத் தொடர்ந்து கவிமணியின் பெற்றோர் அப்பகுதியில் அமைந்துள்ள பாலு மருந்தகத்திற்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த போலி மருத்துவரான சரவணன் கவிமணிக்கு ஊசி போட்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து மயக்கத்துடன் வீடு திரும்பிய அவர் உயிரிழந்துள்ளார்.
இதையும் படிங்க: குமரியில் அதிர்ச்சி... ஆபாச படம் எடுத்து கல்லூரி மாணவிக்கு மிரட்டல்.!! இளைஞர் கைது.!!
போலி மருத்துவர் கைது
இதனைத் தொடர்ந்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறை சரவணனை விசாரித்த போது அவர் முறையாக மருத்துவம் பெறாமல் சிகிச்சை அளித்தது தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். போலி மருத்துவரால் இளைஞர் மரணமடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: அரசியல் பிரமுகர் பாலியல் தொல்லை.!! அட்ஜஸ்ட் செய்யச் சொன்ன கணவன்.!! பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.!!