மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அரசியல் பிரமுகர் பாலியல் தொல்லை.!! அட்ஜஸ்ட் செய்யச் சொன்ன கணவன்.!! பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.!!
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அதிமுக கவுன்சிலர் தனது மருமகளிடம் தவறாக நடக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் அந்தப் பெண்ணின் கணவர் மற்றும் மாமனார் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மருமகளிடம் அத்துமீறல்
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அதிமுக முன்னாள் கவுன்சிலரான பொன்ராஜ் என்பவரது மகன் கவிராமுக்கு, திவ்யதர்ஷினி என்ற பெண்ணுடன் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் திருமணமான நாள் முதலே முன்னாள் அதிமுக கவுன்சிலர் பொன்ராஜ் தனது மருமகளிடம் தவறாக நடக்க முயற்சி செய்திருக்கிறார். இது தொடர்பாக அந்தப் பெண் தனது கணவரிடம் முறையிட்டுள்ளார்.
மாமனாருக்கு அட்ஜஸ்ட் செய்ய கணவன் அறிவுரை
இந்நிலையில் மாமனார் தன்னிடம் அத்துமீறியதாக அந்த பெண் புகார் அளித்த போது தனது தந்தைக்கு அட்ஜஸ்ட் செய்து கொள்ளுமாறு அந்தப் பெண்ணின் கணவரான கவிராம் தெரிவித்திருக்கிறார். மேலும் கருவுற்றிருந்த திவ்யதர்ஷினியை கட்டாயப்படுத்தி அவரது கருவையும் கணவன் குடும்பத்தார் கலைத்திருக்கிறார்கள்.
இதையும் படிங்க: மரணத்தில் முடிந்த லிவிங் டுகெதர் உறவு.!! ஆசிரியைக்கு நேர்ந்த துயர முடிவு.!!
வழக்கு பதிவு
இது தொடர்பாக திவ்யதர்ஷினி மற்றும் அவரது குடும்பத்தார் காவல்துறையினரிடம் புகாரளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் திவ்யதர்ஷினியின் மாமனாரான முன்னாள் கவுன்சிலர் பொன்ராஜ், மகன் கவிராம் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கொலையில் முடிந்த குழாயடி சண்டை.!! இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட மூதாட்டி மரணம்.!!