"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
விளையாட சென்று வீடு திரும்பாத 3 சிறுவர்கள்.! தேடி அலைந்த பெற்றோருக்கு காத்திருந்த பேரிடி!!
கரூர் ஆண்டாள் கோவில் புதூரில் வசித்து வரும் ரமேஷ் என்பவரது மகன் 12 வயது நிறைந்த அஸ்வின். அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீதரின் மகன் 11 வயது நிறைந்த விஷ்ணு, இளங்கோ என்பவரது மகன் 11 வயதுமிக்க மாரிமுத்து. அவர்கள் மூவரும் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்துள்ளனர்.
விளையாட சென்ற சிறுவர்கள்
இந்த நிலையில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் திங்கள்கிழமை காலை அவர்கள் மூவரும் விளையாட செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து சென்றுள்ளனர். ஆனால் மாலை வெகுநேரமாகியும் அவர்கள் மூவரும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவர்களது பெற்றோர் ஊரில் பல்வேறு பகுதிகளிலும் தேடியுள்ளனர். ஆனால் அவர்கள் எங்கும் கிடைக்கவில்லை.
இதையும் படிங்க: பேரதிர்ச்சி.. பரிதாபமாக பறிபோன உயிர்கள்.! பெருந்துயரில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல்!!
கிணற்றில் மூழ்கிய சிறுவர்கள்
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் இரவு 11 மணியளவில் தோட்டத்திற்கு சென்று பார்த்த போது அங்கு கிணற்றின் அருகே மூவரின் காலணிகளும், உடைகளும் கிடந்துள்ளது. இதுகுறித்து சிறுவர்களின் பெற்றோர்களுக்கு தகவலளிக்கப்பட்ட நிலையில் சந்தேகமடைந்த அவர்கள் கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
3 சிறுவர்கள் உயிரிழப்பு
இந்நிலையில் அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் வீட்டுக்குள் தேடிப்பார்த்து இரவு 12 மணியளவில் சிறுவர்கள் மூவரின் உடல்களையும் மீட்டுள்ளனர். பின்னர் அவர்களது உடல்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியையே சோகத்தில் மூழ்கடித்துள்ளது.
இதையும் படிங்க: ஆவடியை அதிரவைத்த இரட்டை கொலை! சிக்கிய செல்போன்.! பதறவைக்கும் பகீர் சம்பவம்!!