திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சென்னையில் சோகம்... நீச்சல் குளத்தில் மூழ்கி பலியான 5 வயது குழந்தை.!! கதறிய பெற்றோர்.!!
சென்னை அருகே விளையாடிக் கொண்டிருந்த 5 வயது குழந்தை நீச்சல் குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அசாம் தம்பதி
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கிருஷ்ணா மற்றும் ஜமுனா தம்பதியினருக்கு 5 வயதில் ஆண் குழந்தை ஒன்று இருந்தது. இந்த தம்பதியினர் இருவரும் சென்னை ஈசிஆர் ரிசார்ட்டில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்தனர். இந்த தம்பதியுடன் அவர்களது குழந்தையும் இருந்து வந்தது. கிருஷ்ணா மற்றும் ஜமுனா தம்பதியினர் ரிசார்டில் தங்கி பராமரிப்பு வேலைகள் மற்றும் தோட்ட வேலைகளை கவனித்து வந்தனர்.
நீச்சல் குளத்தில் விழுந்து பரிதாபமாக பலியான குழந்தை
இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று கணவன் மற்றும் மனைவி இருவரும் வேலை பளு காரணமாக உறங்கி விட்டனர். அப்போது வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தவறுதலாக நீச்சல் குளத்தில் விழுந்து இருக்கிறது. இதனைத் தொடர்ந்து நீரில் மூழ்கிய குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்நிலையில் குழந்தை நீச்சல் குளத்தில் மூழ்கி இருப்பதை கண்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்து குழந்தையை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் குழந்தை இறந்து விட்டது என மருத்துவர்கள் தெரிவித்தனர் .
இதையும் படிங்க: #JustIN: வெளுத்து வாங்கிய மழை; 4 எக்ஸ்பிரஸ் இரயில்கள் ரத்து.. விபரம் இதோ.!
காவல்துறை விசாரணை
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குழந்தை இறந்தது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 5 வயது குழந்தை நீச்சல் குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: #Breaking: நாளை பொளந்துகட்டப்போகும் மழை; 4 மாவட்டங்களில் விடுமுறை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.!