53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
#JustIN: வெளுத்து வாங்கிய மழை; 4 எக்ஸ்பிரஸ் இரயில்கள் ரத்து.. விபரம் இதோ.!
தலைநகர் சென்னையை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வரும் அக்.17 அன்று சென்னை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் கரையை கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் நேற்று முன்தினம் முதல் சென்னையில் கனமழை வெளுத்தது வாங்கிவரும் நிலையில், நேற்று முதல் மிககனமழையும் பெய்தது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: #Breaking: நாளை பொளந்துகட்டப்போகும் மழை; 4 மாவட்டங்களில் விடுமுறை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.!
தண்டவாளத்தில் தேங்கிய மழைநீர்
நாளையும் மேற்கூறிய 4 மாவட்டங்களுக்கு மிககனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, பேசின் பாலம் - வியாசர்பாடி இரயில் நிலையம் இடையே மழை நீர் தண்டவாளத்தில் தேங்கி இருக்கிறது.
இதனால் சென்னை சென்ட்ரலில் இருந்து ஈரோட்டுக்கு இன்று இரவு 11 மணிக்கு புறப்படும் இரயில், இன்று மாலை 4 மணிக்கு புறப்படவேண்டிய திருப்பதி இரயில், இரவு 9 மணிக்கு புறப்படவேண்டிய மைசூர் காவேரி எக்ஸ்பிரஸ், திருப்தியில் இருந்து புறப்பட்டு மாலை சென்னை வரவுள்ள சப்தகிரி எக்ஸ்பிரஸ் இரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாலத்துல இப்பவே இடம் பிடிச்சிரலாம்.. வெள்ளத்தை நினைத்து வேதனையில் வேளச்சேரி மக்கள்.. செய்த காரியம் என்ன?