மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பட்டப்பகலில் காதலி கண்முன்னே துள்ளத்துடிக்க இளைஞருக்கு கொடூரம்.. சென்னையில் பயங்கரம்.!
தாம்பரம் பகுதியில் தனது பெண் தோழியுடன் இருசக்கர வாகனத்தில் பயணித்த ஒரு கல்லூரி மாணவர் நடு ரோட்டில் துள்ள துடிக்க வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
காதலியுடன் பயணம் :
தாம்பரம் கிழக்கு திருவள்ளூர் நகரை சேர்ந்த கனகராஜ் என்பவருக்கு உதயகுமார் என்ற 22 வயது மகன் இருந்துள்ளார். இவர் பள்ளிக்கரணையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு எம்பிஏ படித்து வந்துள்ளார். சிட்லபாக்கம் சேது நாராயணன் சாலை வழியே தன்னுடைய பெண் தோழியுடன் உதயகுமார் இருசக்கர வாகனத்தில் பயணித்துள்ளார்.
விரட்டிவிரட்டி கொலை :
அப்போது அதே வழியில் வந்த அடையாளம் தெரியாத 3 நபர்கள் அவர்களை வழிமறித்து அந்த பெண்ணின் கண் முன்பே உதயகுமாரை சரமாரியாக வெட்டி இருக்கின்றனர். அப்போது உயிருக்கு பயந்து உதயகுமார் தப்பி ஓடிய நிலையில் அந்த கும்பல் விடாமல் தொடர்ந்து சென்று விரட்டி விரட்டி அவரை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியது.
இதையும் படிங்க: விழுப்புரம் அருகே பரபரப்பு... நண்பன் வீட்டிற்கு படிக்க சென்று கைவரிசையை காண்பித்த இளைஞர்...
கொலையாளி நரேஷின் புகைப்படம்
இதை பார்த்த அந்த பெண் தோழி பயந்து கொண்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார். நடுரோட்டில் வாலிபர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதனை தொடர்ந்து, போலீசார் விரைந்து வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
சரணடைந்த கொலையாளிகள் :
உதயாவை வெட்டிய அந்த 3 பேரும் தானாகவே சேலையூர் காவல் நிலையத்தில் வந்து சரணடைந்துள்ளனர். இது சிட்லபாக்கம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நடந்த கொலை என்பதால் சேலையூர் போலீசார் கொலையாளிகள் 3 பேரையும் சிட்லபாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்து இருக்கின்றனர். இந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த உதயகுமார் இன்று காலை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்து இருக்கிறார்.
முன்விரோதம் :
இந்த கொலை குற்றத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் கிருஷ்ணா (வயது 19 ),சாந்தகுமார் (வயது 19 ),எலக்ட்ரீசியன் நரேஷ் (வயது 24 ) ஆகிய கொலையாளிகள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரித்ததில் 4 மாதங்களுக்கு முன்பாக கண்ணப்பர் தெருவில் ஆட்டோ நிறுத்துவதில் நரேஷுக்கும், உதயக்குமாருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது உதயகுமார் நரேஷை ஆபாசமாக பேசி மிரட்டி இருக்கிறார். இதனால் இருவருக்கும் முன் விரோதம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து உதயகுமாரை கொல்வதற்காக தக்க சமயத்தை எதிர்பார்த்து நரேஷ் காத்துக் கொண்டுள்ளார். எனவே, தனது நண்பர்கள் இரண்டு பேருடன் சேர்ந்து உதயகுமாரை அவர் குத்தி கொலை செய்ததாக அவரே வாக்குமூலம் கொடுத்துள்ளார். பட்டப் பகலில் நடு ரோட்டில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.