மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
லாரிக்கு மேலே கட்டிவைத்து அழைத்துச் செல்லப்பட்ட நாய்; பதறவைக்கும் வீடியோ.!
வீடுகளில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்பட்டு வரும் விலங்குகளில், நாய்கள் எப்போதும் முக்கியத்துவத்தை பெரும். சிலருக்கு பூனைகள் மீது விருப்பம் இருக்கும் எனினும், நன்றிக்கு பெயர்போன செல்லப்பிராணிகளாக நாய்கள் இருக்கின்றன.
இவை நம்மீது காண்பிக்கும் அளவில்லாத பாசம் காரணமாக, அவைகள் எப்போதும் நம் அன்புக்கு உறுதுணையாக இருக்கும் விலங்குகளாக, வீட்டுக்குள் அனுமதிக்கப்படும் விலங்குகளாகவும் இருக்கும்.
ஏன் இந்த விபரீத பயணம்...... சேலம் நெடுஞ்சாலையில் லாரியின் மீது கட்டி வைத்து பயணம் வாய் பேச முடியாத ஜீவன்...... மரங்கள் நிறைந்த சாலை @DrMahesraja @mkmganesh pic.twitter.com/JpXsLFK4L8
— RA V Sasikumar - Say No To Drugs & DMK (@sasiitcbe) October 3, 2024
இதையும் படிங்க: அடுத்தடுத்து 10 பேரை துரத்திக்கடித்த தெருநாய்; நாமக்கல்லில் பகீர் சம்பவம்.!
ஒருவேளை சோறிட்டாலும் நன்றியுடன் இருக்கும் நாய்கள், நாம் எங்காவது செல்லும்போது பிரிந்து செல்ல இயலாத வருத்தத்தை தரக்கூடியவை. இதனால் ஒருசிலநேரம் நாய்களை வளர்ப்போர், அதனை தங்களுடன் வெளியூருக்கு இடம்பெயரும்போது அழைத்துச் செல்வது உண்டு.
இந்நிலையில், அவ்வாறான சூழலைபோல, நாய் ஒன்றை லாரியின் மீது கட்டிவைத்து ஆபத்தான முறையில் அழைத்துச்செல்லும் பதறவைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. லாரி மீது அழைத்துச்செல்லப்பட்டது வளர்ப்பு பிராணியா? அல்லது வீடுகளின் மாடியில் இருந்து லாரி மீது குதித்து நிர்கதியாய் தவிக்கிறதா? என தெரியவில்லை. வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ சேலம் நெடுஞ்சாலையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வினையில் முடிந்த பள்ளி பருவ காதல்... பிளஸ் 2 மாணவி கர்ப்பம்.!! 17 வயது மாணவன் கைது.!!