மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடுத்தடுத்து 10 பேரை துரத்திக்கடித்த தெருநாய்; நாமக்கல்லில் பகீர் சம்பவம்.!
நாமக்கல் மட்டத்தில் உள்ள திம்மநாயக்கன்பட்டி பகுதியில், நேற்று தெரு நாய் ஒன்று கடித்து 10 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். திம்மநாயக்கன்பட்டி பகுதியில் ஒருவரை கடித்த நாய், இரத்தம் சொட்டச்சொட்ட அடுத்தடுத்த நபர்களை வெவ்வேறு இடங்களில் கடித்து இருக்கிறது.
அரசு மருத்துவமனையில் அனுமதி
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக அங்கிருந்த அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தகவல் அறிந்து வந்த அதிகாரிகள், கடித்தது சாதரணமாக தெருவில் சுற்றும் நாயா? அல்லது அதற்கு வெறிபிடித்து கடித்ததா? என விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கள்ளக்காதலுக்கு இடையூறு.. 4 வயது குழந்தைக்கு தாய் செய்த கொடுமை.. பரிதாப பலி.!
பொதுமக்கள் கோரிக்கை
காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் பூரண சிகிச்சைக்கு பின்னர் அடுத்தடுத்து வீடு திரும்பி வருகின்றனர். தங்களை கடித்த நாயை அடையாளம்கண்டு, விரைவில் மேற்படி யாரும் பாதிக்கப்படாமல் அதிகாரிகள் பார்த்துக்கொள்ள வேண்டும் என அவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: காய்ச்சலால் மூளைச்சாவடைந்த 11 வயது சிறுவன்; உடல் உறுப்புகளை தானம் செய்த பெற்றோர்.. திண்டுக்கலில் சோகம்.!