"விஜயலட்சுமியின் கர்ப்பப்பையை நீக்க முடிவு.?" வீரலட்சுமி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ.!



a-new-twist-in-the-story-regarding-seeman-and-the-film

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் மீது திரைப்பட நடிகை ஒருவர் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார் என்பது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில், பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்திய நடிகையின் கர்ப்பப்பை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஒரு தகவல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பான வழக்கை விரைவில் விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இதனையடுத்து, சீமானுக்குக்கு காவல்துறையினர் அனுப்பிய சம்மன் அடிப்படையில் சமீபத்தில் அவர் காவல் நிலையத்தில் ஆஜரானார். மேலும், இது தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகையை பற்றி சீமான் பேசிய கருத்துகளுக்கு பலரும் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: "பெரியாரின் ஆவி சீமானை பார்த்துக்கும்" - திமுக பிரமுகர் தடாலடி பேச்சு.!

seeman

இந்நிலையில், தமிழர் முன்னேற்ற படை அமைப்பின் தலைவர் வீரலட்சுமி வெளியிட்டுள்ள வீடியோவில், "பாதிக்கப்பட்ட நடிகை என்னிடம் தொலைபேசியில் பேசினார். தான் முன்பு பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார். சீமானால் 7 முறை கருக்கலைப்பு செய்யப்பட்டதால் கர்ப்பப்பையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

எனவே, மருத்துவர்கள் கர்ப்பப்பையை நீக்க வேண்டும் என கூறியுள்ளார்கள். அவர் கூறிய சில விஷயங்கள் எனக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. " என்று தெரிவித்துள்ளார். மேலும், நடிகைக்கு ஆதரவாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாங்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம் என கூறியுள்ளார். தற்போது, இந்த வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: சிக்கப்போகும் சீமான்? முக்கிய ஆதாரத்தை கொடுத்த நடிகை.. 7 மணிநேரம் விசாரணை.!