சிக்கப்போகும் சீமான்? முக்கிய ஆதாரத்தை கொடுத்த நடிகை.. 7 மணிநேரம் விசாரணை.!



Vijayalatsumi Against Seeman Case 27 Feb 2025 

 

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் மீது, தன்னை பலாத்காரம் செய்து ஏமாற்றி, கருக்கலைப்பு செய்ததாக சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். 

இந்த விஷயம் தொடர்பாக பலகட்ட சட்டப்போராட்டங்களுக்கு பின்னர் தற்போது விசாரணை நடந்து வருகிறது. வழக்கு குறித்து விசாரணை நடத்த நடிகையை நேரில் வர வளசரவாக்கம் காவல்துறையினர் அறிவுறுத்தி இருந்தனர். அவர் தனக்கு உடல்நலக்குறைவு இருப்பதாகவும், தன்னால் சென்னை நேரில் வர இயலாது எனவும் கூறியுள்ளார். 

இதையும் படிங்க: Gold Silver Rate Today: தங்கம் வாங்க இதுவே வாய்ப்பு.. இன்று விலை அதிரடி குறைவு..!

Vijayalatsumi

கூடுதல் ஆதாரம் வழங்கினார்

இதனையடுத்து, சம்பவத்தன்று விசாரணைக்காக நடிகையின் பெங்களூர் வீட்டிற்கு வளசரவாக்கம் காவல்துறையினர் நேரில் சென்றனர். அங்கு சீமானுக்கு எதிரான தனது வாதங்களை நடிகை கூறியதன் பேரில் குறித்துக்கொண்ட அதிகாரிகள், அவர் வழங்கிய கூடுதல் ஆதாரத்தையும் பெற்றுக்கொண்டனர்.

சுமார் 7 மணிநேரம் தொடர் விசாரணை நடந்ததாகவும், சீமானுக்கு எதிராக வழக்கில் தொடர்புடைய ஆதாரங்களை நடிகை வழங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே நடிகை தனக்கு எதிராக தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என சீமான் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தபோது, பாலியல் வழக்கை எளிதாக கையாண்டுவிட முடியாது என நீதிமன்றம் கெடுபிடி காண்பித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 3 வயது சிறுவனின் மூச்சுக்குழாய்யில் சிக்கிய எல்இடி பல்பு.. நெல்லை மருத்துவர்கள் சாதனை.!