அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
கள்ளக்காதலனுடன் பேசும்போது குழந்தைகள் குறுக்கே வந்ததால் சைக்கோவாக மாறிய அபிராமி!. பரபரப்பு தகவல்!.
கள்ளக்காதலுக்காக தனது அழகான இரண்டு குழந்தைகளை கொலை செய்த அபிராமியின் செல்போனை காவல்துறையினர் ஆராய்ந்த போது அவர் ‘டப்ஸ்மாஸ்’ அடிமை என்பது தெரியவந்தது.
அவர் தனது கள்ளக்காதலனுடன் வீடியோ காலில் நீண்ட நேரம் பேசி இருக்கிறார். அதில் ஒரு பகுதியை ‘டப்ஸ்மாஸ்’ ஆக மாற்றி தனது செல்போனில் சேமித்து வைத்து இருக்கிறார்.
இதே போல் குழந்தைகளையும் பேச வைத்து இருக்கிறாள். இதில் குழந்தைகளும் குறுக்கே புகுந்து இடையூறு செய்து இருக்கிறார்கள். இதனால் எரிச்சல் அடைந்து அபிராமி தனது குழந்தைகளை சத்தம் போட்டு மிரட்டியுள்ளார்.
பல சமயம் பக்கத்து வீடுகளுக்கு கேட்கும் அளவுக்கு அவள் குழந்தைகளை சைக்கோ போல் கோபத்தின் எல்லைக்கே சென்று அடித்து அழ வைத்திருக்கிறார். குழந்தைகளின் அழுகை சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர்கள் அபிராமிக்கு அறிவுரை கூறியிருக்கிறார்கள் என கூறப்படுகிறது.
இதனையடுத்து காவல்துறை அதிகாரி கூறுகையில் அபிராமி தனது கள்ள காதலனுடன் வீடியோ கால் மூலம் அடிக்கடி பேசியிருக்கிறார். அதை அவர் தனது செல்போனில் பதிவு செய்தும் வைத்திருக்கிறார்.
அவர் கள்ளக்காதலனுடன் வீடியோவில் பேசும் போது, குழந்தைகள் குறுக்கிட்டால் அவர்களை கடுமையாக தாக்குவாள். அந்த அளவுக்கு கள்ளக்காதல் அவரை மாற்றி இருக்கிறது.