கொஞ்சம் உஷாராய் இருந்திருந்தால் என் பிள்ளைகளை காப்பாற்றியிருப்பேனே!. கதறி அழும் அபிராமியின் கணவர்!.



abirami-husband-crying-for-his-childrens


கடலூரை சேர்ந்த நான் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கேட்டகிரிங் படிப்பதற்காக, சென்னைக்கு வந்தேன். அப்போதுதான் அபிராமியும் நானும் காதலித்து, ஆரம்பத்தில் குடும்பத்தில் சம்மதம் இல்லாமல் பிறகு அவளது பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டேன்.

வங்கி வேலையில் நல்ல சம்பளம் கிடைத்தது. எனவே கேட்டரிங் வேலையை விட்டுவிட்டு பணத்திற்காக வங்கி வேளைக்கு சென்றேன். இதனால் வாழ்க்கை சந்தோஷமாகச் சென்றுகொண்டிருந்தது. கடந்த மாதம் தனது பிறந்தநாளை முன்னிட்டு மனைவி, குழந்தைகளை அழைத்துக்கொண்டு வெளியில் சென்றேன். 

நான் வழக்கமாக வேளைக்கு செல்லும் முன் என் குழந்தைக்கு முத்தம் கொடுத்த பிறகு தான் பணிக்கு செல்வேன். அன்று நான் குழந்தைக்கு முத்தம்கொடுக்க சென்றபொழுது மகள் தூங்கி கொண்டிருந்ததால் அப்படியே சென்றுவிட்டேன்.

abirami killed children

 நான் வேளைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்பொழுது எனது இரு குழந்தைகளும் இறந்துகிடந்தனர். எனது குழந்தைகளை பார்த்து நான் கதறிய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். அப்போது கூட, எனது அபிராமிதான் இப்படி செய்திருப்பாள் என சந்தேகப்படவில்லை.

போலீஸ் விசாரணைக்கு பிறகு குழந்தைகளைக் கொலை செய்ததது அபிராமி தான் என்ற தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்தேன். நான் காதலித்த அபிராமியா இவ்வாறு செய்தார் என்பதை இதுவரை என்னால் நம்ப முடியவில்லை. வழக்கமாக வேலைக்குச் செல்லும்போது என் மகளுக்கு முத்தம்கொடுத்துவிட்டுதான் வேலைக்குச்செல்வேன்.

ஆனால், அவள் இறந்ததுகூட தெரியாமல் முத்தம் கொடுக்கச் சென்றேன். அதை அபிராமி தடுத்துவிட்டார். நான் முத்தம் கொடுத்திருந்தால் உண்மையைக் கண்டுப்பிடித்திருப்பேன். அஜய்யையும் காப்பாற்றியிருப்பேன் என கண்ணீர் விட்டு கதறியுள்ளார்.