திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சிம்பு, பாலாவை தொடர்ந்து நடிகர் வெங்கல் ராவிற்கு நிதியுதவி செய்த பிரபல நடிகை.! எவ்வளவு தெரியுமா??
சினிமா துறையில் சண்டைக் கலைஞராக கால்பதித்து பின்னர் காமெடி நடிகராக அவதாரம் எடுத்து பிரபலமாக வலம் வந்தவர் வெங்கல் ராவ். 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் இருந்து வரும் அவர் நடிகர் வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். வடிவேலுவுடன் இணைந்து அவர் நடித்த பல படத்தின் காட்சிகள் இன்றும் ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்றாக உள்ளது.
கை கால்கள் செயலிழந்த நடிகர் வெங்கல் ராவ்
இந்நிலையில் வெங்கல் ராவ் கடந்த 2022ஆம் ஆண்டு முதல் சிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டார். அவர் விஜயவாடாவில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அண்மையில் அவர் தனது கை, கால்கள் செயலிழந்துவிட்டதாகவும், தனது மருத்துவ சிகிச்சைக்காக உதவி கேட்டும் வேதனையுடன் பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
இதையும் படிங்க: இனி இவர்களுக்கும் ரூ 1000 மகளிர் உரிமை தொகை... யார் யாருக்கெல்லாம் தெரியுமா.?
உதவிக்கரம் நீட்டும் நட்சத்திரங்கள்
இந்நிலையில் சில நடிகர்கள் அவருக்கு உதவ முன் வந்துள்ளனர். வெங்கல் ராவின் மருத்துவ செலவிற்காக நடிகர் சிம்பு ரூ 2 லட்சம் நிதியுதவி வழங்கினார். அவரை தொடர்ந்து விஜய் டிவி KPY பாலா வெங்கல் ராவிற்கு ஒரு லட்சம் ரூபாய் அனுப்பியுள்ளதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அவர்களை தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெங்கல் ராவின் மருத்துவ சிகிச்சைக்காகரூ 25 ஆயிரம் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: அடுத்தகட்டத்துக்கு சென்ற திருமண கொண்டாட்டங்கள்; கில்லி பட பாடலை ரீ-கிரியேட் செய்து அசத்தல்.. வைரல் வீடியோ உள்ளே.!