மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடுத்தகட்டத்துக்கு சென்ற திருமண கொண்டாட்டங்கள்; கில்லி பட பாடலை ரீ-கிரியேட் செய்து அசத்தல்.. வைரல் வீடியோ உள்ளே.!
கடந்த 2004ம் ஆண்டு தரணி இயக்கத்தில், வித்யாசாகர் இசையில் உருவான திரைப்படம் கில்லி. இப்படத்தில் நடிகர்கள் விஜய், திரிஷா, பிரகாஷ் ராஜ், தம்மு, ஜானகி சபேஷ், ஆஷிஷ் வித்யார்த்தி உட்பட பலரும் நடித்து இருந்தனர். இப்படத்தில் இடம்பெற்ற அர்ஜுனன் வில்லு என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் அன்று முதல் இன்று வரை பிரபலமடைந்தது ஆகும்.
அன்று விஜயாக இருந்த நடிகர், இன்று கோடிக்கணக்கான இதயங்களை வென்ற இளைய தளபதியாகவும், அண்ணவாகவும், தளபதியாகவும் அவர் உயர்ந்து நிற்கிறார். தொடர்ந்து, 2026 சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் விஜய் தமிழ்நாடு வெற்றிக்கழகத்தின் சார்பில் தேர்தலில் பங்குகொள்கிறார். இதற்கான ஆயத்த பணிகள் நடைபெறுகின்றன.
இதையும் படிங்க: சம்பளம் கேட்ட மனைவியும், கணவனின் அதிரடி பதிலும்.. எடு 5 ஆயிரத்த... இப்படியும் யோசிக்கலாமா பாஸ்?.!
மறுவுருவாக்கம் செய்யப்பட்ட கில்லி பாடல்
இந்நிலையில், திருமணத்தின்போது ஒவ்வொருவரும் திருமணத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய போட்டோ சூட்களில் ஈடுபடுவது உண்டு. சமீபத்தில் வித்தியாசமான போட்டோ சூட்கள் பிரபலமாகி நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இதனிடையே, தற்போது திரைப்பட காட்சிகளை மறுவுருவாக்கம் செய்த காணொளி வெளியாகி இருக்கிறது.
அந்த வகையில், நடிகர் விஜயின் கில்லி திரைப்படத்தில் இடம்பெற்ற அர்ஜுனர் வில்லு என்ற பாடலை, திருமண ஜோடி மறு உருவாக்கம் செய்து திருமணத்தின்போது உற்றார்-உறவினர் முன்னிலையில் பதிவு செய்துள்ளது. அந்த காணொளி மிகுந்த ஆரவாரத்துடன் வரவேற்கப்பட்டது.
அடுத்த லெவல் போறானுக..... pic.twitter.com/qJMbCzJcVJ
— நாடு எங்கபோகுது? (@Piramachari) June 26, 2024
இதையும் படிங்க: "வேங்கைகளும் இனி தூங்காதடா"... அரிவாளை காட்டி வீடியோ.. சர்ச்சை காணொளி பகீர் வைரல்.!