#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
உங்க வீடியோ தான் ட்ரெண்டிங்.. சபாஷ்.. தமிழக காவல்துறைக்கு நடிகை கஸ்தூரி.!
சென்னையில் உள்ள பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில், நேற்று முந்தினம் நள்ளிரவில் ஜோடி ஒன்று இருந்தது. அதனை கவனித்த காவல்துறையினர், ஜோடியை அங்கிருந்து புறப்பட்டு செல்லுமாறு அறிவுறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்தவர்கள், காவல் அதிகாரிகளை அவதூறாக வசைபாடி இருந்தனர்.
கள்ளக்காதல் ஜோடி அடாவடி
மேலும், அதிகாரிகள் சம்பவத்தை வீடியோ எடுத்தபோது, கள்ளக்காதல் ஜோடி போஸ் கொடுத்து அதிகாரிகளை போதையில் வசைபாடியது. இந்த விஷயம் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகவே, அதிகாரிகள் சந்திரமோகன் - தனலட்சுமி ஆகிய இருவரை கைது செய்தனர்.
இதையும் படிங்க: காவலர்களை அவதூறு பேசி அட்ராசிட்டி செய்த ஜோடி; கவனிப்புக்கு பின் மன்னிப்பு கேட்டு வீடியோ.!
கைது
இருவரும் :இரவில் போதையில் அதிகாரிகளிடம் பாய்ந்தவர்கள், போதை தெளிந்து ஊடகங்களில் செய்தி வெளியாகியதும் கேமராவை கண்டு பாய்ந்து ஓடியது. பின் சந்திரமோகன் தனது செயலுக்கு வருந்தி மன்னிப்பு கேட்கும் விடியோவும் வெளியானது. விசாரணையில், 15 ஆண்டுகளாக கள்ளக்காதலில் ஈடுபட்ட ஜோடியின் மன்மத காதல் லீலையும் அம்பலமானது.
யூடியூப் பக்கத்தை ஆரம்பிங்க - நடிகை கோரிக்கை
விசாரணைக்கு பின்னர் இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே, நடிகை கஸ்தூரி தனது எக்ஸ் (ட்விட்டர்) வலைத்தளபக்கத்தில், மேற்குறிப்பிட்ட விஷயத்தை மேற்கோளிட்டு, "தமிழக காவல்துறைக்கு சபாஷ். நீங்கள் ஒரு யூடியூப் பக்கத்தை தொடங்கிவிடலாம். உங்களின் வீடியோ தான் ட்ரெண்டிங்கில் போகிறது" என கூறியுள்ளார்.
சபாஷ் @tnpoliceoffl
— Kasturi (@KasthuriShankar) October 22, 2024
வர வர உங்க விடியோவெல்லாம் தான் top trending. பேசாம youtube channel ஆரம்பிக்கலாம்!
பி கு : சந்திரமோகன் விரல் உடஞ்சிருக்கே... கவனிச்சீங்களா?
பி.பி.கு : தனலட்சுமி எங்கே? https://t.co/Lu0GZcJzMs
இதையும் படிங்க: ரௌடிகளுக்கு அவர்களின் மொழியில் பாடம்; காவல் ஆணையர் அருண் மன்னிப்பு கோரினார்.!