மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காவலர்களை அவதூறு பேசி அட்ராசிட்டி செய்த ஜோடி; கவனிப்புக்கு பின் மன்னிப்பு கேட்டு வீடியோ.!
சென்னையில் உள்ள பட்டினப்பாக்கம் கடற்கரைக்கு, நேற்று நள்ளிரவு 12:30 மணிக்கு வருகை தந்த ஜோடி ஒன்று, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவலர்களின் விசாரணைக்கு பதில் சொல்லாமல் அடாவடியாக பேசி இருந்தது.
மேலும், காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டோள்ளோரை பார்த்து அவதூராகவும் பேசியது. இந்த விஷயம் குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது.
இதையும் படிங்க: #Breaking: செப்டிக் டேங்க் லாரி மோதி கல்லூரி மாணவி பலி; சென்னையில் சோகம்.!
நேற்று ஜோடி எகுறியபோது பேசிய காணொளி
நேற்று இரவு 20.10.24 நள்ளிரவு 12 மணிக்கு பட்டினப்பாக்கம் லூப் சாலையில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களிடம் குடித்து விட்டு தகாத வார்த்தைகளால் திட்டி வேலையைக் காலி பண்ணிடுவேன் என மிரட்டும் தொனியில் பேசும் இந்த ஜோடிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
— ஏதிலிக்குருவி 🐦 (@JpTwitsz) October 21, 2024
No: TN 10 AE 2500 pic.twitter.com/240KRbzvs5
இதனிடையே, அவர்கள் குறித்து விசாரணை நடத்த உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனையடுத்து, வேளச்சேரியை சேர்ந்த சந்திர மோகன், அவரின் தோழி ஆகியோரை காவல் துறையினர் இன்று கைது செய்து விசாரணைக்கு அழைத்து வந்தனர்.
விசாரணையில் சந்திரமோகன் தனது செயலுக்கு மன்னிப்புக்கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த தகவலை சென்னை காவல்துறை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளது.
கவனிக்குப்பின் மன்னிப்பு வீடியோ பார்க்க இங்கு அழுத்தவும்
He said he left the scene after scolding the police. Would police normally let any common man leave the scene after scolding them? Why was he allowed to leave without detaining him?
— Bala (@skorpien) October 21, 2024
இதையும் படிங்க: சேலம்: ஐயோ.. பார்க்கவே பதறுதே.. தனியார் பேருந்து மோதி பயங்கர விபத்து.. 50 பேரின் உயிர் தப்பியது..!