#Breaking: சபாநாயகருக்கு எதிராக தீர்மானத்தில் அதிமுக பின்னடைவு.. குரல் வாக்கெடுப்பில் தோல்வி.!



aiadmk-resolution-failed-in-tn-assembly-against-speaker

 

தமிழ்நாடு சட்டப்பேரவையில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக நிர்வாகிகள் உரையாற்றும்போது, மக்களுக்கு அவை ஒளிபரப்பு செய்யப்படாமல் இருட்டடிப்பு செய்யப்படுகிறது. சபாநாயகர் நடுநிலை தன்மையுடன் செயல்படவில்லை உட்பட பல்வேறு காரணங்களை முன்வைத்து, அதிமுக கட்சியின் சார்பில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

AIADMK

தீர்மானம் மீதான விவாதம்

இந்த தீர்மானத்தின் மீது இன்று விவாதம் நடைபெற்ற நிலையில், சட்டப்பேரவை குழு தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான முக ஸ்டாலின், தீர்மானம் தொடர்பாக உரையாற்றினார். ஆசிரியராக பணியாற்றிய அப்பாவுவின் செயல்பாடுகள் பிடித்தே, நான் அவரை சபாநாயகருக்கு போட்டியிட வலியுறுத்தினேன். அவர் எப்போதும் நடுநிலை தன்மையுடன் செயல்படுவார். எந்த உறுப்பினரையும் கடிந்துகொள்ளாமல் நியாயத்துடனே செயல்படுவார். அவரின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை திமுக உறுப்பினர்கள் மறுக்கின்றனர் என முக ஸ்டாலின் கூறினார்.

இதையும் படிங்க: "சரியான பாதையில் செல்கிறேன்" - கே.ஏ செங்கோட்டையன் பரபரப்பு பேச்சு.. அதிர்ச்சியில் அதிமுக வட்டாரம்.!

AIADMK

தீர்மானம் தோல்வி

அதனைத்தொடர்ந்து, தீர்மானம் மீதான குரல் வாக்கெடுப்பு நடந்த நிலையில், சபாநயாருக்கு எதிரான நம்பிக்கையில்லாத தீர்மானம் தோல்வியை தழுவியது. குரல் வாக்கெடுப்பில் தோல்வியை தழுவிய காரணத்தால், அதிமுக தீர்மானத்துக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து சபாநாயகராக அப்பாவு தொடருவார். 

சுமார் 164 உறுப்பினர்கள் அதிமுக தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்து இருக்கின்றனர். அதிமுக தீர்மானத்துக்கு ஆதரவாக 63 உறுப்பினர்கள் மட்டுமே வாக்களித்தனர். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம், வைத்தியலிங்கம், மனக்கசப்பில் இருக்கும் செங்கோட்டையன் ஆகியோரும் அதிமுக தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்கு அளித்து இருந்தனர். எனினும், பெரும்பான்மை கிடைக்காமல் அதிமுக தீர்மானம் புறக்கணிக்கப்பட்டது. அதிமுக இதுவரை கொண்டு வந்த பல தீர்மானங்களை கண்டுகொள்ளாமல் இருந்த ஓபிஎஸ், இன்று அதிமுக ஆதரவு நிலைப்பாட்டினை எடுத்துள்ளார்.

இதையும் படிங்க: #Breaking: சைடு கேப்பில் சபாநாயகருக்கு ஆப்பு வைத்த அதிமுக; "நம்பிக்கையில்லா தீர்மானம்" - விவாதத்துக்கு ஏற்பு.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!