"சரியான பாதையில் செல்கிறேன்" - கே.ஏ செங்கோட்டையன் பரபரப்பு பேச்சு.. அதிர்ச்சியில் அதிமுக வட்டாரம்.!



in Chennai Chetpat AIADMK KA Sengottaiyan Speech 16 March 2025 


கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, கோவை விவசாயிகள் சார்பில் பாராட்டு விழா முன்னெடுக்கப்பட்டது. இந்த விழாவில் அதிமுக மறைந்த மூத்த தலைவர்கள் புகைப்படம் எங்கும் இடம்பெறவில்லை என்று கூறி, அக்கட்சியின் மூத்த நிர்வாகி கே.ஏ செங்கோட்டையன் கூட்டத்தை புறக்கணித்தார். 

இதற்கு பின்னர் அதிமுக கட்சி கூட்டங்களையும் தவிர்த்து வந்தவர், சமீபத்தில் நடைபெற்ற 2 நாட்கள் சட்டப்பேரவை கூட்டத்தொடரில், அதிமுக எம்.எல்.ஏக்களுடன் நடைபெறும் ஆலோசனை கூட்டத்திலும் பங்கேற்காமல் புறக்கணித்தார். இதனால் எடப்பாடி வெர்சஸ் செங்கோட்டையன் நிலை என்பது உறுதியானது.

AIADMK

செங்கோட்டையன் பேட்டி

இந்நிலையில், சென்னையில் உள்ள சேத்துப்பட்டு பகுதியில் தனியார் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அப்போது பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன், "இக்கட்டான நிலையில் இருக்கிறேன். வெளிப்படையாக பேச முடியாது. நான் போகும் பாதை சரியானது, முறையானது. திட்டமிட்ட பாதையில் சென்று வெற்றி அடைவேன்" என பேசினார்.

இதையும் படிங்க: #Breaking: சைடு கேப்பில் சபாநாயகருக்கு ஆப்பு வைத்த அதிமுக; "நம்பிக்கையில்லா தீர்மானம்" - விவாதத்துக்கு ஏற்பு.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

இதனால் அதிமுகவில் தலைமையுடன் செங்கோட்டையன் கொண்டுள்ள கருத்து வேறுபாடு குறித்த விஷயம் உறுதி செய்யப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், அவரை சமாதானம் செய்யும் முயற்சியில் அதிமுக மூத்த நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர். செங்கோட்டையன் எந்த மனநிலையில் இருக்கிறார் என்பது தெரியாமல், அதிமுக நிர்வாகிகளும் திணறலுக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

இதையும் படிங்க: #Breaking: மொழியை திணிக்க நினைத்தால் பிரச்சனை தான் வரும் - முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி.!