#Breaking: திமுக அரசின் இந்த அராஜகப் போக்கு; 2026ல் ஆப்பு உறுதி - அண்ணாமலை ஆவேசம்.! 



Annamalai Statement on 25 March 2025 

 

இந்து சமய அறநிலையத் துறையைச் சுரண்டிக் கொண்டிருப்பவர்கள் ஒவ்வொருவரும், சிறைக்குச் செல்வது உறுதி என அண்ணாமலை தெரிவித்தார்.

திருச்செந்தூரில் உள்ள முருகன் கோவிலில், சமீபத்தில் பக்தர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், சில வாரங்களுக்கு முன்பு, பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வைத்து அவதிப்பட்டதாக வீடியோ வெளியானது. மேலும், திருச்செந்தூர் கோவில் அர்ச்சகர்கள், சிறப்பு தரிசனம் என்ற பெயரில் நபருக்கு தலா ரூ.1000 முதல் ரூ.5000 வரை வசூல் செய்து மோசடி செயலில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகிறது. திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு நடக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

இதையும் படிங்க: #Breaking: சென்னையில் 1 மணிநேரத்திற்குள் 7 இடங்களில் அடுத்தடுத்து செயின் பறிப்பு.. வலிமை திரைப்பட பாணியில் பயங்கரம்.! 

அவலநிலை

திருச்செந்தூர் கோவிலில் நடக்கும் சர்ச்சைக்குரிய விஷயங்களை கையில் எடுத்து, பாஜக தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "திருச்செந்தூர் திருக்கோவிலில் பல நூறு கோடி செலவில் ஆலய மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்றதாகத் திமுக அரசு கூறியது. ஆனால், அங்கு அடிப்படை வசதிகள் கூட முறையாகச் செய்யப்படவில்லை என்பதைத் தொடர்ந்து செய்திகளில் கண்டு வருகிறோம். இந்த நிலையில், கோவிலுக்குள் பக்தர்களுக்கு அமைக்கப்பட்டிருக்கும் கழிப்பறைகளின் அவல நிலையைக் காணொளியாக வெளியிட்ட தமிழக பாஜவைச் சேர்ந்த திரு. பிரதீப்ராஜன் அவர்கள் வீட்டிற்கு, அதிகாலை நான்கு மணிக்குக் காவல்துறையை அனுப்பி மிரட்டியிருக்கிறது திமுக அரசு. 

சிறைக்கு செல்வது உறுதி

எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் திமுக, தனது ஊழலை மக்கள் மத்தியில் வெளிப்படுத்துபவர்கள் மீது, காவல்துறையையோ, குண்டர்களையோ ஏவுவது வழக்கமாகி இருக்கிறது. திமுக அரசின் இந்த அராஜகப் போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறோம். தமிழகத்தில் வரும் 2026 ஆம் ஆண்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும்போது, இந்து சமய அறநிலையத் துறையைச் சுரண்டிக் கொண்டிருப்பவர்கள் ஒவ்வொருவரும், சிறைக்குச் செல்வது உறுதி" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதையும் படிங்க: Chennai: அலட்சியத்தால் சோகம்.. ஈரமான கையுடன் செல்போனுக்கு சார்ஜ்.. ஸ்விட்சை தொட்டதும் பறிபோன உயிர்.!