இயக்குனர் பாரதிராஜா மகன் தாஜ்மஹால் நாயகன் காலமானார்.! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!
Chennai: அலட்சியத்தால் சோகம்.. ஈரமான கையுடன் செல்போனுக்கு சார்ஜ்.. ஸ்விட்சை தொட்டதும் பறிபோன உயிர்.!

மின்சார விஷயத்தில் அலட்சியம் கூடாது என்பதற்கு உதாரணமாக சிறுமியின் மரணம் நடந்துள்ளது.
சென்னை உள்ள எண்ணூர் பகுதியில் வசித்து வருபவர் முகுந்தன். இவரின் மனைவி விஜயா. தம்பதிகளுக்கு அனிதா என்ற 14 வயது மகள் இருக்கிறார். சிறுமி அனிதா, அங்குள்ள அரசுப்பள்ளியில் பதினோராம் வகுப்பு பயின்று வருகிறார்.
இதனிடையே, சிறுமி நேற்று வீட்டில் இருந்த தனது செல்போனுக்கு சார்ஜ் போட முற்பட்டார். கைகள் ஈரமாக இருந்த நிலையில், அலட்சியமாக சார்ஜ் போட்டு இருக்கிறார்.
இதையும் படிங்க: கள்ளக்காதலனுடன் ஜல்சா.. கணவனை மாட்டிவிட மனைவி எடுத்த அஸ்திரம்.. போலீசுக்கே ட்விஸ்ட் வைத்த பெண்.!
மின்சாரம் தாக்கி பலி
சிறுமி ஸ்விட்சை அழுத்தியதும், அவரின் கைகளில் இருந்த ஈரம் காரணமாக மின்சாரம் தாக்கியது. இந்த சம்பவத்தில் சிறுமி மயங்கி சரிந்தார்.
அவரை மீட்ட பெற்றோர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தபோதிலும், சிறுமி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியது.
சிறுமியின் மரணம் குறித்து எண்ணூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னையில் கஞ்சா விற்பனை ராஜ்ஜியம்.. இன்ஸ்டாகிராம் காதல் ராணியை கஞ்சாவுடன் தூக்கிய போலிஸ்.!