எஸ்.பி வேலுமணி - எடப்பாடி பழனிச்சாமி இடையே உட்கட்சி பூசல்? - முக்கிய புள்ளியின் பரபரப்பு பேச்சு.!



annamalai-statement-on-aiadmk-sp-velumani-speech

 

2024 மக்களவை பொதுத்தேர்தலில், கோவை மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் அண்ணாமலை, அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன், திமுக சார்பில் கணபதி ராஜ்குமார் ஆகியோர் களமிறங்கி இருந்தனர். தேர்தல் முடிவுகளின்படி திமுக வேட்பாளர் வெற்றிவாகை சூடினார். இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி உடைந்து அதிமுக - தேமுதிக ஒரு அணியாகவும், பாஜக - பாமக மற்றும் அதன் கூட்டணிகள் தனியாகவும் தமிழ்நாட்டில் தேர்தலை எதிர்கொண்டது. இது திமுகவுக்கு பெருவாரியான வெற்றி முகத்தை ஏற்படுத்தியது. 

40 தொகுதியிலும் திமுக வெற்றி

மத்தியில் பாஜக ஆட்சி எனினும், தமிழ்நாடு & புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் 40ம் திமுக-காங்கிரஸ் கூட்டணி வசம் சென்றது. கோவை தொகுதியில் வேட்பாளராக களமிறங்கிய அண்ணாமலை குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி பல கருத்துக்களை முன்வைத்தார். 

இதையும் படிங்க: 40 க்கு 40 நமதே.. வெற்றிசுடர் ஏந்திய தங்கங்களை நேரில் அழைத்து பாராட்டிய திமுக தலைவர்..!

Lokshaba election

எஸ்.பி வேலுமணியின் பேச்சு

இதுகுறித்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "எல்.முருகன், தமிழிசை ஆகியோர் பாஜக மாநில தலைவராக இருந்தபோது, கூட்டணி நன்றாக இருந்தது, அண்ணாமலை மாநில தலைவராக பொறுப்பேற்ற பின் கூட்டணிக்குள் பிரச்சனை ஏற்பட்டது. அதுதான் கூட்டணி முறிவுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. கூட்டணி முறிவுக்கு அண்ணாமலை மட்டுமே காரணம். அண்ணாமலை அதிகம் பேசியது மட்டுமே கூட்டணி முடிவுக்கு முக்கிய காரணமாகவும் அமைந்துள்ளது. ஜெயலலிதா, அண்ணா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் குறித்து பல்வேறு சர்ஹி கருத்துக்களை அவர் தெரிவித்து வந்தார்" என கூறினார்.

அண்ணாமலையின் பதில்

இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை "கோவை மக்கள் சந்தர்ப்பவாத கட்சியான அதிமுகவை நிராகரித்துவிட்டனர். அதனால் எஸ்பிஐ வேலுமணி பாஜகவுக்கு எதிராக பேசுகிறார். அங்குள்ள 3 சட்டப்பேரவை தொகுதிகளில் இருக்கும் மக்கள், அதிமுகவை டெபாசிட் இழக்க வைத்துள்ளனர். கூட்டணியில் இருக்கும்போது ஒரு பேச்சு, வெளியே வந்து ஒரு பேச்சு என அதிமுகவினர் இருக்கிறார்கள். தமிழ்நாடு மக்கள் அதிமுக தலைவர்களுக்கு பாடம் புகட்டி இருக்கின்றனர். எஸ்பி வேலுமணிக்கும் - எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே உட்கட்சி பூசலால், அவர் சார்ந்த அமைப்பு தோல்வி அடைந்துள்ளது" என பேசினார். 

இதையும் படிங்க: கோவை தொகுதியின் வெற்றிமுகம் அண்ணாமலையா? ராமச்சந்திரனா? ராஜ்குமாரா?.. கருத்துக்கணிப்பு நிலவரம் என்ன?.!