திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
40 க்கு 40 நமதே.. வெற்றிசுடர் ஏந்திய தங்கங்களை நேரில் அழைத்து பாராட்டிய திமுக தலைவர்..!
2024 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான இண்டி கூட்டணி 240 இடங்களில் அமோக வெற்றிபெற்று, தொடர்ந்து மூன்றாவது முறையாக எதிர்க்கட்சி இருக்கையில் மாறுகிறது. கடந்த 2 முறை போல அல்லாமல், மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ள காங்கிரஸ், பல கருத்து கணிப்புகளை பொய்யாக்கி இருக்கின்றன.
பாஜக ஆட்சி
இந்தியா முழுவதும் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். விரைவில் மீண்டும் பாஜக தலைக்கையிலான ஆட்சி மீண்டும் மத்தியில் நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை அக்கட்சியினர் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: "இந்தியாவுக்கே புதிய விடியல்.. இன்னும் 3 நாட்கள் தான்" - முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிவிப்பு..!
தமிழ்நாட்டில் 40 தொகுதியிலும் திமுக கூட்டணி வெற்றி
இந்நிலையில், தமிழ்நாடு முதல்வர் & திமுக தலைவர் மு.க ஸ்டாலின், மக்களவைத் தேர்தல் 2024ல் வெற்றி அடைந்த நபர்களை, அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவிக்கிறார் அதேபோல, தேர்தல் வெற்றிக்காக உழைத்த அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகளையும் நேரில் சந்தித்து வாழ்த்துகிறார்.
திமுக தொண்டர்கள் மற்றும் கூட்டணிக்கட்சியினர் ஏற்கனவே தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலும் உள்ள 40 தொகுதியிலும் திமுக கூட்டணி வெற்றி அடைந்ததை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், அறிவாலயமும் இன்று கொண்டாட்டத்தில் திளைக்கிறது.
தமிழ்நாட்டில் திமுக - காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது குறிப்பிடத்க்கது.
இதையும் படிங்க: கோவை தொகுதியின் வெற்றிமுகம் அண்ணாமலையா? ராமச்சந்திரனா? ராஜ்குமாரா?.. கருத்துக்கணிப்பு நிலவரம் என்ன?.!