53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
கோவிலில் அர்ச்சனை செய்யவந்த பெண்ணை அறைந்த அர்ச்சகர்! அதிர்ச்சி வீடியோ!
சிதம்பரத்தை சேர்ந்த செல்வகணபதி என்பவரின் மனைவி தனது மகனின் பிறந்தநாளுக்காக சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு அர்ச்சனை செய்வதற்கு சென்றுள்ளார். அங்கு முக்குறுணி விநாயகர் சன்னிதியில் அர்ச்சனை செய்ய சென்றார்.
அவர் அர்ச்சகர் தர்ஷனிடம் தேங்காயை கொடுத்து மகன் பேரில் அர்ச்சனை செய்யுமாறு கூறியுள்ளார். ஆனால் அவர் அர்ச்சனை ஏதும் செய்யாமல் தேங்காயை உடைத்து கொடுத்துள்ளார். இதற்கு அர்ச்சனை செய்யாமல் தேங்காயை மட்டும் ஏன் உடைத்தீர்கள் அந்த பெண் கேட்டுள்ளார். அதற்கு அர்ச்சகர் அந்த பெண்ணை திட்டியுள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் பெண் பக்தரை கன்னத்தில் அறைந்த #தீட்சிதர்.@thirumaofficial @BJP4TamilNadu @Narayanan3 @dinakaranonline @thatsTamil @fx16news @dinathanthi @PTTVOnlineNews @polimernews @velichamtvtamil @bbctamil pic.twitter.com/30rd9lpAxw
— Vck Bala.Puthiyavan (@VckPuthiyavan) November 17, 2019
இதனால் உடைத்த தேங்காயை நான் வாங்கமாட்டேன் என அந்த பெண் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அர்ச்சகர் அந்த பெண்ணை கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்துஅர்ச்சகருக்கும், அந்த பெண்ணிற்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதுதொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி வருகிறது. இதனையடுத்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் தீட்சிதர் தர்ஷன் மீது போலீசார் வழக்குப் பதிவு தர்ஷனை தேடி வருகின்றனர்.