பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது இவர்கள்தான்? வெளியான தகவல்.!
ஏலியன் இருக்கா? இல்லையா? - முன்னாள் விண்வெளி வீரர் ராகேஷ் ஷர்மா கூறுவது என்ன?.!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளாளூர் பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட முன்னாள் விண்வெளி வீரர் ராகேஷ் ஷர்மா, மாணவ-மாணவியர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
ஏலியன்கள் வசிக்க வாய்ப்பு
அப்போது, ஒரு மாணவி ஏலியன்கள் குறித்த கேள்வியை முன்வைத்தார். இதற்கு பதிலளித்த ஷர்மா, "விண்வெளியில் மிதக்கும் கழிவுகள், விஞ்ஞான வளர்ச்சிக்கு சவாலாக இருக்கிறது. அதனை நாம் விரைந்து சரிசெய்ய வேண்டும். விரைவில் மறுசுழற்சி செய்யும் செயற்கைகோள்களை அதிகம் உருவாக்கி, அதனை பயன்படுத்த வேண்டும். அதுவே விண்வெளியில் தேவையற்ற கழிவுகளை குறைக்க உதவி செய்யும். பிரபஞ்சத்தில் ஏலியன்கள் வசிக்க வாய்ப்புகள் உள்ளது. நான் அதனை நம்புகிறேன்" என கூறினார்.
இதையும் படிங்க: வால்பாறை அரசு கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பேராசிரியர், லேப் அசிஸ்டன்ட் உட்பட 4 பேர் கைது.!
விலகத்தொடங்கும் மர்மம்:
ஏலியன்கள் தொடர்பான தகவல் உலகளவில் பெரும் கேள்விக்குறியோடு இருந்து வந்த நிலையில், சமீபகாலமாகவே ஏலியன்கள் வருகை மற்றும் அவர்களின் விபரம் குறித்த பல்வேறு தகவல்கள் உறுதியான பதிலகளாக இல்லாமல் வெளிவருகின்றன. அமெரிக்காவில் முன்னாள் விமானப்படை ஊழியர் ஒருவரும், ஏலியன்களை வைத்து அமெரிக்கா ஆராய்ச்சி செய்கிறது என கூறுவதும் குறிப்பிடத்தக்கது,
இதையும் படிங்க: சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு; அருப்புக்கோட்டை பெண் டிஎஸ்பி தாக்குதல் விவகாரத்தில் இ.பி.எஸ் கொக்கரிப்பு.!