#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வேஷ்டி கட்டி வந்தால் பிரியாணி இலவசம்! பிரபல பிரியாணி கடை அசத்தல் ஆஃபர்..!
ஜனவரி 6 , உலக வேஷ்டி தினத்தை முன்னிட்டு, வேஷ்டி அணிந்துவந்தால் பிரியாணி இலவசம் என அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது சென்னையில் உள்ள பிரியாணி கடை ஓன்று. கைத்தறி நெசவு தொழிலை காப்பாற்றும் விதமாகவும், இளைஞர்கள் வேஷ்டி அணியும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாகவும் ஜனவரி 6ம் தேதி உலக வேஷ்டி தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நாளை கொண்டாடப்பட இருக்கும் வேஷ்டி தினத்தை முன்னிட்டு, வேஷ்டி அணிந்து வந்து பிரியாணி வாங்கினால் ஒரு பிரியாணி இலவசம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுவரை பல வித்தியாசமான அறிவிப்புகளை வெளியிட்டு சமூக வலைத்தளங்களில் பிரபலமாக பேசப்படும் தொப்பி வாப்பா பிரியாணி கடைதான் இந்த முறையும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், ஜனவரி 6 , மதியம் 12 மணிக்கு, வெள்ளை வேஷ்டி அணிந்தவரும் முதல் 50 பேருக்கு ஒரு பிரியாணி வாங்கினால் ஒரு பிரியாணி இலவசம் என்றும், கைத்தறி நெசவாளர்களுக்கு உதவும் விதமாக, ஒரு பக்கெட் பிரியாணி வாங்கினால் ஒரு கைத்தறி வேஷ்டி, துண்டு இலவசம் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.