தொலை நோக்குச் சிந்தனை கொண்ட பட்ஜெட்; அண்ணாமலை பாராட்டு.!



BJP Annamalai on 2025 Budget Session Announcements 


2025 - 2026 மக்களவை கூட்டத்தொடர், இன்று பட்ஜெட் தாக்கலுடன் தொடங்கியது. இந்த மத்திய பட்ஜெட்டில், தனிநபர் வருமான வரம்பு அதிகரிப்பு, புற்றுநோய்க்கான மருந்துகளுக்கு வரிச்சலுகை மற்றும் வரிவிலக்கு உட்பட பல அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. 

மேலும், புதிய வருமான வரி சட்டம் 2025 அடுத்த வாரம் தனியாக தாக்கல் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வருமான வரிச்சட்டம் அனைவரையும் சென்று சேரும் வகையில், பல விஷயங்கள் ஏளிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், பட்ஜெட் 2025 க்கு பாராட்டுக்கள் தெரிவித்துள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய பட்ஜெட் 2025 தொலைநோக்கு எண்ணத்துடன் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறினார். 

இதையும் படிங்க: #Breaking: திருப்பரங்குன்றத்தால் உண்டாகப்போகும் மதப்பிரச்சனை? இராமநாதபுரம் எம்.பி செயல்.. அண்ணாமலை கண்டனம்.!

பட்ஜெட் அறிவிப்புகள் அண்ணாமலையின் ட்விட் பதிவில் பின்வருமாறு

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "தொலை நோக்குச் சிந்தனையுடன் கூடிய பிரதமர் நரேந்திர மோடியின் கனவான, வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கிய மிகச் சிறந்த பட்ஜெட்டை நாட்டுக்கு வழங்கியிருக்கும் நமது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழக மக்கள் சார்பாகவும், தமிழ்நாடு பாஜக சார்பாகவும், மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: #Breaking: பரந்தூரை தேர்வு செய்தது மாநில அரசா? மத்திய அரசா? - அண்ணாமலை பரபரப்பு பேச்சு..!