JustIN: "நாய் ஏத்துற வண்டியில் நான் ஏறமாட்டேன்" - பாஜக எச். ராஜா டென்ஷன்.!



bjp-h-raja-anger-with-cops-during-tasmac-scam-protest-1

 

ஊழல் செய்த செந்தில் பாலாஜியை கைது செய்யமால், எங்களை கைது செய்வது ஏன் என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா ஆதங்கத்தில் பேசினார்.

 

தமிழ்நாடு டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனையின் முடிவில், ரூ.1000 கோடி ஊழல் நடந்தது உறுதி செய்யப்பட்டது. இந்த விஷயம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய அரசியல் பூகம்பத்தை கிளப்பி இருக்கும் நிலையில், ஆளும் திமுக அரசு மௌனம் காக்கிறது. மேலும், ஊழலே நடைபெறாத இடத்தில் அமலாக்கத்துறை ஊழல் நடந்ததாக கூறி அவதூறு பரப்புகிறது என துறையின் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறி வருகிறார். 

இதையும் படிங்க: #Breaking: பாஜக தலைவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம்.. திருமாவளவன் கண்டனம்.. பேட்டி உள்ளே.!

பாஜக தலைவர்கள் கைது

ஊழல் தொடர்பான விசயத்துக்கு பொறுப்பேற்று, அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலக வேண்டும் என பாஜக தரப்பு போரட்டம் முன்னெடுத்து இருக்கிறது. இன்று எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவிப்பும் வெளியிடப்பட்டது. போராட்டத்துக்கு செல்ல முயன்ற பாஜக மூத்த தலைவர் தமிழிசை, மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் ஆகியோர், அவர்களின் வீட்டிலேயே கைது செய்யப்பட்டனர். மேலும், எழும்பூரில் வைத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டார். 

tamilnadu

எச். ராஜா ஆவேசம்

இந்நிலையில், எழும்பூரில் பாஜக நிர்வாகிகளுடன் போரட்டம் நடத்த வந்த பாஜக மூத்த தலைவர் எச். ராஜா, காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நான் என்ன குற்றவாளியா? குற்றவாளி ஏறும் வண்டியில் நான் ஏறமாட்டேன். செந்தில் பாலாஜி என்ற குற்றவாளியை சிறையில் வைத்து, அவர் மீண்டும் இன்று வந்து குற்றம் செய்கிறார். செந்தில் பாலாஜியை கைது செய்ய உங்களுக்கு முதுகெலும்பு உண்டா?. காவல்துறை குற்றவாளிகளுக்கு சல்யூட் அடிக்கிறது. 

காவல்துறை வாகனத்தை நாய் ஏற்றும் வண்டி என விமர்சனம்

நாய் ஏற்றும் வண்டியில் நாங்கள் ஏறமாட்டோம். நாய் ஏற்றும் வண்டியை ஏன் எடுத்துவந்தீர்கள்? எங்களை எதற்கு கைது செய்கிறீர்கள்? செந்தில் பாலாஜியை உங்களுக்கு கைது செய்ய முடியுமா?. காவல்துறை வாகனத்தில் நான் ஏறமாட்டேன். எங்களை நீங்கள் இங்கு கைது செய்யலாம். நாங்கள் வீடு-வீடாக செல்வதை யாராலும் தடுக்க இயலாது" என எச்.ராஜா வாக்குவாதம் செய்தார். இதனால் அங்கு மாநகர பேருந்து கொண்டு வரப்பட்டு, அதில் ராஜா கைதாகி ஏறிச் சென்றார். தனியார் மண்டபத்தில் எச். ராஜா மற்றும் பாஜக நிர்வாகிகள் கைது செய்து அடைத்து வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: #Breaking: அண்ணாமலை கைது.. டாஸ்மாக் ஊழல் ரூ.40000 கோடி.. A1 குற்றவாளி முக ஸ்டாலின் - பரபரப்பு பேட்டி.! தமிழக அரசியலில் திடுக்.!