மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வெளுத்து வாங்கப்போகும் கனமழை; பேருந்து ஓட்டுனர்களுக்கு முக்கிய அறிவுரை.!
தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் மிக கனமழைக்கான எச்சரிக்கையை விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாகவே பெய்து வரும் கோடை மழையின் காரணமாக, அம்மாவட்டங்களில் உள்ள பல நீர்நிலைகள் நிரம்ப தொடங்கி இருக்கின்றன.
திடீர் மழையால் நேர்ந்த சோகம்
சமீபத்தில் பெய்த மழையில், தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவியில் குளித்துக்கொண்டு இருந்த சிறுவன் காற்றாற்று வெள்ளத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அதேபோல, திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் 65 பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த நீரில் சிக்கிக்கொண்டது.
இதையும் படிங்க: கனமழை எச்சரிக்கை.! குமரி மாவட்டத்தில் தயார் நிலையில் இருக்கும் தீயணைப்பு படையினர்!!
ரெட் அலர்ட் விடுப்பு
இந்நிலையில், தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், ஓட்டுனர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது,பேருந்துகள் மற்றும் மக்கள் பயணிக்கும் வாகனங்களை இயக்குவோர், சாலைகளில் ஓரமாக வாகனத்தை இயக்க வேண்டாம்.
வாகன ஓட்டுனர்களுக்கு அறிவுறுத்தல்
தாழ்வான இடங்களில் நீர் தேங்கி இருந்தால், அங்கு வாகனத்தை இயக்க கூடாது. சுரங்கப்பாதை போன்ற இடங்களை கடக்கும்போது கவனம் வேண்டும். மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை நினைவில் கொண்டு வாகனத்தை இயக்குமாறும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
நெல்லை போக்குவரத்து கழக அதிகாரிகளும் தங்களின் அறிவுறுத்தலை ஓட்டுனர்களுக்கு வழங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: ரம்மியமாய் காட்சிதந்த மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெப்பக்குளம்; மழையின் போது காணக்கிடைக்காத காட்சி உள்ளே.!