கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
6 பேர்க்கு கொரோனா பாசிடிவ்.! சென்னை, கோவை மக்கள் அதிர்ச்சி.? சுகாதார துறை வேண்டுகோள்.!?
சீனாவில் ஆரம்பித்த கொரோனோ
2020 ஆம் வருடத்தை யாராலும் மறக்க முடியாத அளவிற்கு உலகெங்கும் கொரானோ வைரஸ் படையெடுத்தது. இதனால் உலகம் முழுவதும் ஒரு வருடத்திற்கு லாக் டவுனில் இருந்ததை யாராலும் இன்று வரை மறக்க முடியாத சம்பவமாகவே இருந்து வருகிறது. சீனாவில் ஆரம்பித்து நாடு முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் உலக மக்கள் பெரும்பாலானோரின் வாழ்க்கையை புரட்டி போட்டது.
மீண்டும் பரவும் கொரோனா வைரஸ்
இதனையடுத்து தற்போது வரை கொரோனா வைரஸ் குறித்த அச்சம் மக்களிடையே இருந்து வருகிறது. இது போன்ற நிலையில் மீண்டும் கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவ தொடங்கி உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் சென்னை, கோவையில் 6 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இல்லத்தரசிகளை சற்று மகிழ்ச்சியில் ஆழ்த்திய தங்கம் விலை... இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன தெரியுமா.?
சுகாதாரத்துறை வேண்டுகோள்
கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்துவிட்டது என்று மக்கள் தைரியமாக இருக்கும் இந்த சூழ்நிலையில், மீண்டும் கொரோனா வைரஸ் பரவி வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் இது குறித்து சுகாதாரத்துறை, கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், கொரோனா குறித்து தேவையில்லாத அச்சம் மக்களுக்கு வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: #Breaking: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் வெட்டிப்படுகொலை.. ஓடஓட விரட்டி பயங்கரம்.!