மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கிண்டி: பிரபல உணவகத்தின் கழிவறையில் ரகசிய கேமிரா.. திமுக மகளிரணி பிரமுகர் புகார்.!
இரயில் நிலையத்திற்கு அருகே செயல்பட்டு வரும் உணவகத்தின் கழிவறையில் செல்போன் கேமிரா வைத்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
சென்னையில் உள்ள வளசரவாக்கம் பகுதியை சேர்ந்தவர் பாரதி. இவர் மதுரவாயல் தொகுதி திமுக மகளிரணி அமைப்பாளர் ஆவார். உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மாவட்ட செயலாளரை சந்திக்க நேற்று கிண்டி வந்துள்ளார்.
அப்போது, உள்ளாட்சி தேர்தல் நேர்காணலில் கலந்துகொண்டு, கிண்டி இரயில் நிலையம் அருகேயுள்ள சங்கீதா உணவகத்தில் மதிய சாப்பாடு சாப்பிட சென்றுள்ளார். உணவகத்தில் கழிவறை இருந்த நிலையில், அங்கு இயற்கை உபாதையை கழிக்க பாரதி சென்றுள்ளார்.
அங்கிருந்த அட்டை பெட்டியில் கேமரா இருப்பது போன்று தெரிந்த நிலையில், அதனை பாரதி எடுத்து பார்த்த போது செல்போன் கேமரா ஆன் செய்யப்பட்ட நிலையில் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் போனை பறிமுதல் செய்து, கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.