கல்கி 2898 ஏடி படம் குறித்த முக்கிய அப்டேட் கொடுத்த இயக்குனர்; ரசிகர்கள் ஹேப்பி.!
#Breaking: சென்னையில் பரபரப்பு.. பிரபல அரசியல்கட்சி மாநில தலைவரை கொலை செய்ய முயற்சி.. 6 பேர் கும்பல் வெறிச்செயல்.!

சென்னையில் உள்ள பெரம்பூர் பகுதியில் வசித்து வருபவர் ஆம்ஸ்ட்ராங். இவர் மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாதி கட்சி தமிழ்நாடு மாநில தலைவராக இருந்து வருகிறார்.
இன்று இவர் தனது வீட்டருகே நின்றுகொண்டு இருந்தார். அச்சமயம் அங்கு இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், ஆம்ஸ்ட்ராங்கை திடீரென சுற்றிவளைத்து சரமாரியாக தாக்கியது.
இதையும் படிங்க: பாக்ஸ்கான் நிறுவனத்திற்கு வந்த சிக்கல்.. அறிக்கை கேட்ட மத்திய அரசு.. நடந்தது என்ன?.!
முதற்கட்ட தகவல்கள் வெளியீடு:
அரிவாளால் ஆம்ஸ்ட்ராங்கை கடுமையாக வெட்டிச்சாய்த்து பின் அங்கிருந்து தப்பி சென்றது. இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்துள்ளனர்.
கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள அப்பலோ மருத்துவமனையில் ஆம்ஸ்ட்ராங் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பதற்ற சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறது.
இதையும் படிங்க: கண்ணை மறைத்த காமம்... கொலையில் முடிந்த கள்ளக்காதல்.!! எமனாக மாறிய நண்பன்.!!