மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#JustIN: 12 வயது சிறுவனை கடித்துக்குதறிய நாய்; சென்னையில் மீண்டும் பயங்கரம்.!
சென்னையில் சமீபகாலமாகவே நாய்கள் சிறார்களை குறிவைத்து தாக்கும் அதிர்ச்சி சம்பவம் அதிகரித்து வருகிறது. நொய்டா, டெல்லி போன்ற பகுதிகளில் வளர்க்கப்பட்டு வந்த ராட்வீலர் போன்ற நாய்களால் சிறார்கள் மற்றும் பெரியவர்கள் பாதிக்கப்பட்ட பல நிகழ்வுகள் செய்திகளாக வெளிவந்து இருக்கின்றன.
கொளத்தூரை சேர்ந்த சிறுவன் பாதிப்பு
இவற்றையெல்லாம் கண்டும் காணாது ராட்வீலர் போன்ற வெறிகொண்ட நாய்களை வாங்கி வளர்க்கும் நபர்களின் கட்டுப்பாடுகள் மீறியும் சில நேரம் மூர்க்கத்துடன் அவை தாக்கி வருகின்றன. இதனிடையே, சென்னையில் உள்ள கொளத்தூர் பகுதியை சேர்ந்த சிறுவனை நாய் ஒன்று தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.
இதையும் படிங்க: நள்ளிரவில் பதம்பார்த்த நாய்கள்; 9 ஆடுகள் பலி., 6 ஆடுகள் படுகாயம்.!
சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த 12 வயது சிறுவன் ராட்வீலர் எனப்படும் நாய் தாக்கியதில், உடல் முழுவதும் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டுள்ளார். மேற்படி கள நிலவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: 6 வயது சிறுமியை துரத்திக்கடித்த நாய்; சென்னையில் மீண்டும் பதறவைக்கும் சம்பவம்..!