#Breaking: இரவு 7 மணிவரை 24 மாவட்டங்களில் வெளுத்துவாங்கப்போகும் மழை; அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
தமிழ்நாட்டில் தென்மேற்குப்பருவமழை பருவமழை தீவிரமடைந்து, விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளது. தாமதமாக வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என எதிர்பார்க்கப்பட்டாலும், தமிழ்நாட்டில் வரும் 5 நாட்களுக்கு மழைக்கான சாதக சூழல்கள் தென்படுகின்றன.
மிதமான / கனமழைக்கு வாய்ப்பு
இந்நிலையில், வரும் இரவு 7 மணிவரையில் தமிழ்நாட்டில் உள்ள நீலகிரி, கோவை, தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் இடி-மின்னலுடன் அதிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தூத்துக்குடி, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி-மின்னலுடன் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னை நகரை திணறவைத்த இந்திய விமானப்படை சாகசம்; திரும்பிய திசையெல்லாம் மக்கள் வெள்ளம்., கொண்டாட்டமும்., அவதியும்.!
மேலும், திருவள்ளூர், திருப்பத்தூர், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், மயிலாடுதுறை, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நெரிசலில் சிக்கிக்கொண்ட ஆம்புலன்சில் துடித்த கர்ப்பிணி; ஓடிச்சென்று உதவிய இளைஞர்கள்.. குவியும் பாராட்டுக்கள்.!