மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நெரிசலில் சிக்கிக்கொண்ட ஆம்புலன்சில் துடித்த கர்ப்பிணி; ஓடிச்சென்று உதவிய இளைஞர்கள்.. குவியும் பாராட்டுக்கள்.!
92 வது விமானப்படை தினத்தையொட்டி, சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில், அக்.06 ம் தேதியான ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்ட அளவிலான வான் சாகச நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இதற்காக அண்ணாசதுக்கம், மெரினா கடற்கரை சாலைகளில் பலத்த பாதுகாப்பு ஏற்படும், வாகனம் மாற்றுப்பாதையில் செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இன்று காலை முதலாக மெரினா கடற்கரையில் குவிந்த பொதுமக்கள், விமானப்படையின் வீரதீர சாகசங்களை நேரில் கண்டு ரசித்தனர். வான் சாகசத்தை நேரில் காண இலட்சக்கணக்கில் மக்கள் சென்றதால் முக்கிய இரயில் மற்றும் பேருந்து நிறுத்தங்களில் மக்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. மேலும், பல முக்கிய சாலைகளிலும் போக்குவரத்து சிரமம் ஏற்பட்டது.
இதையும் படிங்க: முன்னாள் பெண் போலீசை ஏமாற்றிய இன்ஸ்டா பிரபலம்.. எப்.ஐ.ஆர் போட்டதும் தலைமறைவு.!
கர்ப்பிணி வலியால் துடிப்பு
இதனால் வரிசைகட்டி வாகனங்கள் நின்றுகொண்டு இருக்க, காவல்துறையினர் போக்குவரத்தை சீர்படுத்த பல துயரங்களுக்கு உள்ளகிப்போனார். இதனிடையே, நகரக்கூட இடமில்லாத இடத்தில் அவசர ஊர்தி ஒன்று சிக்கிக்கொண்டது. அதில் கர்ப்பிணி பெண்மணி இருந்தார். அவர் பிரசவ வலியால் துடித்துக்கொண்டு இருந்தார்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த இளைஞர்களில் சிலர், தாமாக உதவ முன்வந்து செயல்பட்டனர். இளைஞர்கள் பெண்ணை ஸ்ட்ரெச்சரில் வைத்து தூக்கியபடி தோளில் சுமந்து மருத்துவமணிக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் பெண்மணி அனுமதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு மருத்துவர்கள் அவசர சிகிச்சையை வழங்கினர். இளைஞர்களின் செயல் பாராட்டுகளை பெற்றுள்ளது.
ஆம்புலன்ஸில் வலியுடன் போராடிய கர்ப்பிணி.. ஸ்ட்ரெச்சரில் தூக்கி ஓடிய இளைஞர்கள்... மக்கள் கூட்டத்தில் உயிரை காத்த மனிதநேயம்!#IndianAirForceDay2024 #92ndAnniversary #AirShow2024 #AirForceDay2024 #Ambulance #PregnantWomen #PublicCrowd #Airforceday #ChennaiMarina #NewsTamil24x7 pic.twitter.com/jvbf4nF59w
— News Tamil 24x7 (@NewsTamilTV24x7) October 6, 2024
இதையும் படிங்க: சென்னை ஐஸ்வர்யா மால்-ஐ வாரித்தூற்றிய பொதுமக்கள்.. ஆபர் அறிவிப்பு கேன்சலால் குமுறும் மக்கள்.. கொக்கரிப்பு.!