#Breaking: அடுத்த 3 மணிநேரத்திற்கு 30 மாவட்டங்களில் கனமழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!



Chennai RMC Says 30 Districts Rain  

 

வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ராமநாதபுரம்‌ மற்றும்‌ தென்காசி மாவட்டங்களில் மழைக்கான முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

ஆரஞ்சு எச்சரிக்கை விடுப்பு

இந்நிலையில், மதியம் 1 மணிவரையில், அடுத்த 3 மணிநேரத்திற்கு 30 மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: தாம்பரம்: பெண் காவலரின் தங்க சங்கிலி பறிப்பு; பின்தொடர்ந்து வந்து துணிகரம்.!

chennai

மிதமான மழைக்கு வாய்ப்புள்ள இடங்கள்

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான இடி-மின்னலுடன் கூடிய மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Gold Price: தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.120 குறைவு.. இன்றைய விலை நிலவரம் உள்ளே.!